For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் 2022 - சென்னை மோதும் ஆட்டம் விவரம் இதோ.. சென்னை Vs மும்பை மோதல் எப்போது?

மும்பை: ஐபிஎல் 2022ஆம் ஆண்டிற்காக அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. வரும் 26ஆம் தேதி தொடங்கி வரும் மே 29ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன.

மொத்தம் 65 நாட்கள் நீடிக்கும் இந்த தொடரில் மொத்தம் 70 போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகள் 7.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் ஆட்டத்தில் கடந்த முறை இறுதிப் போட்டியில் மோதிய சென்னை, கொல்கத்தா அணிகள் வரும் 26ஆம் தேதி வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.

சிஎஸ்கே Vs ஆர்சிபி

சிஎஸ்கே Vs ஆர்சிபி

சென்னை அணி தனது 2வது ஆட்டத்தில் வரும் 31ஆம் தேதி லக்னோ அணியுடன் மோதுகிறது. 3வது ஆட்டத்தில் ஏப்ரல் 3ஆம் தேதி பஞ்சாப் அணியுடன், 4வது லீக் ஆட்டத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி ஐதராபாத் அணியுடன் சென்னை பலப்பரீட்சை நடத்துகிறது. ஏப் 12ஆம் தேதி சென்னை அணி தனது 5வது லீக் ஆட்டத்தில் பெங்களூருவுடன் மோதுகிறது.

சிஎஸ்கே vs மும்பை

சிஎஸ்கே vs மும்பை

வரும் ஏப்ரல் 17ஆம் தேதி சென்னை அணி, குஜராத்துடன் மோதுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் மும்பையுடன் சென்னை மோதும் ஆட்டம் வரும் ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 25ஆம் தேதி சென்னை அணி தனது 8வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

முக்கிய கட்டம்

முக்கிய கட்டம்

மே 1ஆம் தேதி சென்னை தனது 9வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியுடன் மோதுகின்றன. மே 4ஆம் தேதி சென்னை அணி தனது 10வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியுடன் விளையாடுகிறது. சென்னை அணி தனது 11வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை மே 8ஆம் தேதி எதிர்கொள்கிறது.

இறுதி ஆட்டங்கள்

இறுதி ஆட்டங்கள்

சென்னை அணி தனது 12வது லீக் ஆட்டம் மே 12ஆம் தேதி மும்பை அணியுடன் விளையாடுகிறது. மே 15ஆம் தேதி சென்னை அணி குஜராத் அணியுடன் மோதுகிறது. சென்னை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மே 20 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது. மே 23ஆம் தேதி முதல் பிளே ஆப் சுற்றும், இறுதிப் போட்டி 29ஆம் தேதியும் நடைபெறுகிறது.

Story first published: Sunday, March 6, 2022, 17:55 [IST]
Other articles published on Mar 6, 2022
English summary
IPL schedule 2022 announced – CSK Full match details is here ஐபிஎல் 2022 – முதல் போட்டியில் சிஎஸ்கே, கொல்கத்தா மோதல் - சென்னை மோதும் ஆட்டம் விவரம் இதோ..
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+