For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

க்ளோஸ் கிரவுண்ட் மேட்ச்.. கொரோனாவால் பிசிசிஐ எடுத்த முடிவு.. ஐபிஎல்லில் நடக்க போகும் அதிரடி மாற்றம்?

கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்தியாவில் இந்தமுறை ஐபிஎல் போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

டெல்லி: கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்தியாவில் இந்தமுறை ஐபிஎல் போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Recommended Video

அச்சுறுத்தும் கொரோன வைரஸ்... ஐபிஎல் நிலை என்ன?

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி வருகிறது. முதலில் மத்திய சீனா, ஹாங்காங் பகுதியில் இந்த வைரஸ் பரவி வந்தது. இந்த வைரஸ் கொரோனா வைரஸ் எனப்படும் வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது ஆகும்.

102,241 பேர் உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதித்துள்ளனர். உலகம் முழுக்க 3,497 கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர். ஈரானில் மிக வேகமாக வைரஸ் பரவி வருகிறது. அங்கு 3,713 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 135பேர் இதனால் பலியாகி உள்ளனர்.

என்ன சொல்கிறார்

என்ன சொல்கிறார்

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஐபிஎல் போட்டி நடக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசு சார்பாக ஐபிஎல் போட்டியை தள்ளி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல் இன்னொரு பக்கம் ஐபிஎல் போட்டிகளில் கோடிகளை முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் போட்டியை தள்ளிப்போடக் கூடாது என்றுள்ளனர்.

ஐடியா என்ன

ஐடியா என்ன

அதன்படி கொரோனாவிற்கும் மத்தியில் ஐபிஎல் போட்டியை நடத்த வேண்டும் என்பதற்கு முதலீட்டாளர்கள் புதிய ஐடியா ஒன்றை கொடுத்துள்ளனர். அதன்படி ஐபிஎல் போட்டிகளை க்ளோஸ் கிரவுண்ட் மேட்ச் போல நடத்தலாம். அதாவது ரசிகர்கள் யாரும் இல்லாமல். வெறும் மைதானத்தில் வீரர்கள், நடுவர்கள் மட்டும் வைத்து போட்டியை நடத்தலாம். இதன் மூலம் கொரோனா பரவுவதை தடுக்கலாம் என்று கூறுகிறார்கள்.

வருமானம் குறைவு

வருமானம் குறைவு

பொதுவாக ஐபிஎல் போட்டிகளில் 30-40 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இதில் அதிகபட்சம் 10 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில் 50% அணிகளுக்கு செல்லும். மீதம், பிசிசிஐ அமைப்பிற்கு செல்லும். இது மொத்த போட்டி வருமானத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் மிகவும் குறைவு. ஐபிஎல் ரசிகர்களில் மொத்தம் 1% பேர்தான் போட்டியை மைதானத்தில் பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்க வாய்ப்பு

அதிகரிக்க வாய்ப்பு

அதேபோல் கொரோனா அச்சம் காரணமாக இந்த முறை டிக்கெட் வாங்குவதும் வெகுவாக குறையும். ஆனால் சாட்டிலைட் மூலமும், ஆன்லைன் மூலமும் பல லட்சம் பேர் போட்டிகளை பார்க்கிறார்கள். ஸ்டார் டிவி இந்த முறை 3270 கோடி கொடுத்த ஐபிஎல் தொடரை ஒளிபரப்புகிறது. இந்த முறை ரசிகர்களை வர விடாமல் போட்டியை நடத்தினால் டிவியில் போட்டியை பார்க்கும் எண்ணிக்கை அதிகம் ஆகும். இதனால் வருவாயும் அதிகம் ஆகும்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இதனால் இந்தியாவில் இந்தமுறை ஐபிஎல் போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள். ரசிகர்களை இந்த செய்தி பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஐபிஎல் போட்டிகளை மைதானத்தில் பார்க்க ஆர்வமாக இருந் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Story first published: Saturday, March 7, 2020, 12:52 [IST]
Other articles published on Mar 7, 2020
English summary
IPL season 12 may go for closed ground matches due to CoronaVirus epidemic.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+