For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்று தொடங்குகிறது யெல்லோ ஆர்மியின் ஐபிஎல் பயணம்… என்ன பிளஸ், என்ன மைனஸ்..?

சென்னை:எந்த அணிக்கும் இல்லாத கிரேஸ் இந்த அணிக்கு இருக்கிறது என்றால்... அதற்கு ஷாட்சாத் காரணம் தோனிதான். தோனியை தவிர ஒன்றும் இல்லை. அணியின் விவரங்களை பார்க்கலாம்...

2 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் கடந்த சீசனில் மீண்டும் களமிறங்கிய நிலையில் சாம்பியன் பட்டம் வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதிலும் இறுதி ஆட்டம் சூப்பர்... 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி மகுடம் சூடியது.

ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு ஆகியோர் பேட்டிங்கில் பெரிய அளவில் நிலைக்க காரணமாக இருந்தனர். அணியில் உள்ள 5 பந்து வீச்சாளர்கள் தலா 10 விக்கெட்களுக்கு மேல் சாய்த்தனர். இம்முறை சேப்பாக்கத்தில் தனது சொந்த மைதான ஆட்டங்களை முழுமையாக விளையாடுவதை எதிர்நோக்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சிஎஸ்கேவின் பலம்

சிஎஸ்கேவின் பலம்

சென்னை அணியின் பேட்டிங் வரிசை மிகவும் நேர்த்தியானது. டாப் ஆர்டரில் ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு வலுவாக உள்ளனர். எனவே... அதன் பின்னர் களமிறங்கும் வீரர்களுக்கு எந்தவித அழுத்தமும் இல்லை. கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நடுவரிசையும், பின்கள வரிசையும் பலமாக இருந்தது வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

கலக்கும் பந்து வீச்சு

கலக்கும் பந்து வீச்சு

மற்ற அணிகளை காட்டிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பந்து வீச்சு அம்சங்கள் சிறப்பு. சொந்த மைதானத்தில் ஒரே ஒரு ஆட்டத்தை மட்டுமே விளையாடிய நிலையில் காவிரி பிரச்சினை போராட்டங்கள் காரணமாக எஞ்சிய ஆட்டங்களை புனேவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. சுழற்பந்து வீச்சில் ஜடேஜா, இம்ரான் தாஹிர், மிட்செல் சான்ட்னர் ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் டேவிட் வில்லி, தீபக் ஷகார், ஷர்துல் தாக்குர் ஆகியோரும் உள்ளனர்.

யார்? யார்?

யார்? யார்?

கடந்த சீசனில் இடம்பெற்றிருந்த 23 வீரர்கள் அப்படியே உள்ளனர். மார்க்வுட், கனிஷ்க் சேத், கிஷ்திஸ் சர்மா ஆகியோர் இல்லை. அவர்களுக்கு பதிலாகதான் மோஹித் சர்மா, ரித்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர்.

அணியின் பலவீனம்

அணியின் பலவீனம்

அணியில் உள்ள 25 வீரர்களில் 13 பேர் 30 வயதை தாண்டியவர்கள். அதனால் தான் வயதான அணி என விமர்சனத்துக்குள்ளாகி அதை உடைத்து கடந்தாண்டு கோப்பையை கைப்பற்றியது. அந்த விமர்சனம் இம்முறையும் வெளியாகும் என்று தெரிகிறது.

ரன்களை தரும் அணி

ரன்களை தரும் அணி

கடைசி 5 ஓவர்களில் அதிக ரன்களை வாரி வழங்கும் 2வது அணியாக சென்னை உள்ளது. கடந்த சீசனில் முதலில் பந்து வீசிய ஆட்டங்களில் ஒரே ஒரு முறை மட்டுமே வித்தியாசமாக இருந்தது. அதில் தான்... எதிரணியை கடைசி 5 ஓவர்களில் 40 ரன்களுக்கு குறைவாக எடுக்க வைக்கும் அளவுக்கு பந்துவீச்சு கட்டுக்கோப்பாக இருந்தது.

ஐபிஎல்லில் இதுவரை

2008 -2-வது இடம்

2009 -அரை இறுதி

2010 - சாம்பியன்

2011 - சாம்பியன்

2012 - 2-வது இடம்

2013 -2-வது இடம்

2014 -அரை இறுதி

2015 - 3-வது இடம்

2016 - சஸ்பெண்ட்

2017 - சஸ்பெண்ட்

2018 - சாம்பியன்

எம்.எஸ். தோனி

எம்.எஸ். தோனி

சென்னையின் செல்லப்பிள்ளை தோனி எப்போதும் ரசிகர்களின் பேராதரவை பெற்றவர். 3 முறை தோனி தலைமையில் சிஎஸ்கே அணி பட்டம் வென்ற நிலையில் தற்போது 4-வது முறையாக களம் காண்கிறது.

அம்பதி ராயுடு

அம்பதி ராயுடு

கடந்த சீசனில் ஒரு சதம், 3 அரை சதங்கள் என 602 ரன்கள் மேல் குவித்தார். உலக கோப்பை அணியில் இடம் பெறக்கூடிய வீரர்களில் ஒருவராக உள்ளார். அவரிடம் இந்தாண்டு நிறைய எதிர்பார்க்கலாம்.

ஷேன் வாட்சன்

ஷேன் வாட்சன்

ஐபிஎல் தொடரில் 4 சதங்களை விளாசிய வீரர். வயது 37, கடந்த சீசனில்மட்டும் இரு சதங்கள் அவரது கணக்கில் உள்ளது. இம்முறையும் சதங்கள் அடிப்பார் என்று நம்பலாம்.

ரவீந்திர ஜடேஜா

ரவீந்திர ஜடேஜா

ரன்களை விடாமல் கட்டுப்படுத்தும் இடதுகை சுழற்பந்து வீச்சாளர். இக்கட்டான தருணத்தில் பேட்டிங்கில் கைகொடுப்பது, பீல்டிங்கில் சூப்பரான வேகம் அவரது பிளஸ் பாயிண்ட்.

டு பிளெஸ்சிஸ்

டு பிளெஸ்சிஸ்

தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ். எந்த பந்துவீச்சு ஒற்றை மனிதராக நின்று துவம்சம் செய்பவர். கடந்த சீசனில் அதிக வாய்ப்புகள் கிடைக்காத அவருக்கு இம்முறை கிடைக்கும் என்று கூறலாம்.

Story first published: Saturday, March 23, 2019, 14:18 [IST]
Other articles published on Mar 23, 2019
English summary
Ipl season 2019, starts today and chennai super kings meet royal challengers Bangalore.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+