ஐபிஎல் ஊழல்: நானா அப்படி சொன்னேன்- மீடியா மீது நடிகை ப்ரீத்தி ஜிந்தா பாய்ச்சல்
மும்பை: பஞ்சாப் அணி வீரர்கள் ஐபிஎல் ஊழலில் ஈடுபட்டனர் என தான் தெரிவித்ததாக போலியாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று கூறி நடிகை ப்ரீத்தி ஜிந்தா மீடியாவை திட்டியுள்ளார்.
கடந்த 8ம் தேத நடந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய கூட்டத்தில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகையும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான
ப்ரீத்தி ஜிந்தா தனது அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது.
இதை பார்த்து ப்ரீத்தி ஜிந்தா கோபம் அடைந்துள்ளார். இந்நிலையில் அவர் இது குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
அதிர்ச்சி
@IndianExpress பொறுப்பில்லாமல் தவறான செய்தியை வெளியிட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளேன்.
குப்பை
உண்மையை சரிபார்க்காமல் குப்பை கதையை பரப்புவதை நிறுத்துங்கள் என்று ட்விட்டரில் கோபத்தில் சீறியுள்ளார் ப்ரீத்தி.
பாலிகிராப்
உண்மையை கண்டறிய வீரர்களுக்கு பாலிகிராப் சோதனை நடத்தலாம் என்று தான் பிசிசிஐக்கு பரிந்துரை செய்தேன்.
டுவிஸ்ட்
வரும் முன் காப்பது நல்லது என்று நினைத்தேன். ஆனால் IndianExpress @abpnewshindi @abpnewstv ஆகியவை கதையையே மாற்றிவிட்டன.
பரபரப்பு
ஆட்டத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்த உண்மையாக நடந்த பேச்சுவார்த்தையை பரபரப்பை ஏற்படுத்த மாற்றிவிட்டனர் என்று தெரிவித்துள்ளார் ப்ரீத்தி.


Click it and Unblock the Notifications