Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன அதே மாதிரியே நடக்குது.. 2011 - 2022 ஐபிஎல் ஓற்றுமைகள்.. அப்போ கோப்பை சிஎஸ்கே க்கு தானா?

மும்பை: ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடரில் புதயதாக 2 அணிகளுடன் சேர்ந்து 10 அணிகள் இம்முறை போட்டிய்ல விளையாடுகிறது.

இந்த நிலையில், ஏற்கனவே இதே போன்று 10 அணிகள் மோதிய போது ஐபிஎல் தொட்ரில் என்ன நடந்தது என்பதை ஒப்பீட்டு ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

அப்போது 2011ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கும், இப்போது நடைபெற உள்ள தொடருக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

10 அணிகள்

10 அணிகள்

2022ஆம் ஆண்டில் 10 அணிகள் பங்கேற்பது போல், 2011ஆம் ஆண்டும் 10 அணிகள் ஐபிஎல் தொடரில் மோதின. 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதே போன்று இந்த ஆண்டும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.

நடப்பு சாம்பியன்

நடப்பு சாம்பியன்

2011ஆம் ஆண்டு நடப்பு சாம்பியனாக சிஎஸ்கே களமிறங்கியது. இதே போன்று 2022ஆம் ஆண்டு நடப்பு சாம்பியனாக சிஎஸ்கே அணி களமிறங்குகிறது. 2011ஆம் ஆண்டு 10 அணிகள் இரண்ட பிரிவுளாக பிரிக்கப்பட்டது. இதே போன்று 2022 ஐபிஎல் தொடரம், 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கேக்கு வாய்ப்பு?

சிஎஸ்கேக்கு வாய்ப்பு?

2011ஆம் ஆண்டு முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை நடத்தின. அதே போன்று 2022ஆம் ஆண்டின் முதல் போட்டியில் சிஎஸ்கேவும், கொல்கத்தா அணிகளும் மோதுகின்றன. இதனால் 2011ஆம் ஆண்டு சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தை வென்றத போல் 2022ஆம் ஆண்டும் சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடினமான வாய்ப்பு

கடினமான வாய்ப்பு

அப்படி வெல்லும் பட்சத்தில் அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணியின் சாதனையை சிஎஸ்கே சமன் செய்யும். ஆனால் இந்த பயணம் அவ்வளவு எளிதாக இருக்காது. ஏனெனில் பல்வேறு அணிகள்,புதிய வீரர்களுடன் களமிறங்குவதால் இந்த பயணம் சுலபமாக இருக்காது. இதனால் எந்த அணி விரைவில் அணியை கட்டமைத்து, சிறப்பாக விளையாடுகிறரோ, அந்த அணியே சாம்பியன் பட்டம் வெல்லும்.

Story first published: Monday, March 21, 2022, 1:33 [IST]
Other articles published on Mar 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+