Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகாலம் தடை!

சென்னை: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகாலம் தடை விதித்துள்ளது நீதிபதி ஆர். எம்.லோதா கமிட்டி.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராஜ்குந்த்ரா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை நடத்திய நீதிபதி லோதா தலைமையிலான குழு இன்று ஐ.பி.எல். பிக்ஸிங் விவகாரத்தில் ஈடுபட்டோருக்கான தண்டனை விவரங்களை இன்று அறிவித்தது.

IPL Spot fixing: CSK, RR suspended for 2 years

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளர் ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு 2 ஆண்டுகாலம் தடை விதித்துள்ளது நீதிபதி லோதா கமிட்டி.

இந்தியா சிமெண்ட்ஸுக்கும் தடை

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஐ.பி.எல். கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட 2 ஆண்டுகாலத்துக்கு தடை விதித்துள்ளது நீதிபதி லோதா கமிட்டி.

இதனால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இனி 2 ஆண்டுகாலங்களுக்கு விளையாட முடியாத நிலை உருவாகி உள்ளது.

Story first published: Tuesday, July 14, 2015, 14:34 [IST]
Other articles published on Jul 14, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+