For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வைபவ் சூர்யவன்ஷியால் இந்திய அணியில் இடம் பெற முடியாது.. ஐசிசி விதியால் ஏற்பட்ட புதிய சிக்கல்

ஐபிஎல் தொடரில் 14 வயதில் அதிவேக சதம் அடித்து கிரிக்கெட் உலகை மிரள வைத்த வைபவ் சூர்யவன்ஷி, உடனடியாக இந்திய அணியில் இடம் பெற முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, 2025 ஐபிஎல் மெகா ஏலத்தின் போது 13 வயதாக இருந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

அப்போது அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1.1 கோடி ரூபாய்க்கு வாங்கியது, கிரிக்கெட் வட்டாரத்தில் ஆச்சரியத்தையும் கேலிக்குள்ளான விமர்சனங்களையும் ஒருசேர எதிர்கொண்டது. 13 வயது வீரரை 1.1 கோடி ரூபாய் சம்பளம் அளித்து பயிற்சி அளிக்கப் போகிறதா ராஜஸ்தான் ராயல்ஸ் எனப் பலரும் கேள்வி எழுப்பினர்.

IPL Star Vaibhav Suryavanshi Cannot Play for India Immediately Due to ICC Age Limit

ஆனால், விமர்சகர்கள் எண்ணத்திற்கு மாறாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வைபவ் சூர்யவன்ஷிக்கு போட்டிகளில் வாய்ப்பளித்தது. அவர் இதுவரை மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் நிலையில், தனது மூன்றாவது போட்டியில் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். வெறும் 35 பந்துகளிலேயே சதம் அடித்து, ஐபிஎல் வரலாற்றில் இந்திய வீரர் ஒருவரின் அதிவேக சதம் என்ற புதிய சாதனையைப் படைத்தார்.

இதைத் தொடர்ந்து, வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் உடனடியாக வாய்ப்பளிக்கப்படும் என்றும், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முந்தி மிக இளம் வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இந்திய வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைப்பார் என்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால், அடுத்த ஓராண்டுக்கு வைபவ் சூர்யவன்ஷியால் இந்திய அணியில் இடம்பெற முடியாது என்ற தகவல் வெளியாகி உள்ளது. 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சில விதிகளை அமல்படுத்தியது. அதில், சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பும் ஒன்று.

அதன்படி, 15 வயதான வீரர்கள் தான் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியும். எனவே, தற்போது 14 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷியால் இந்திய அணியில் அடுத்த ஓராண்டுக்கு இடம்பெற முடியாது. வைபவ் சூர்யவன்ஷி 2026 ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று தான் 15 வயதை எட்டுவார். அதன் பிறகே அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்க முடியும்.

இதுவரை சர்வதேச அளவில் மிக இளம் வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை பாகிஸ்தானின் ஹாசன் ராசா வைத்துள்ளார். அவர் தனது 14 வயது, 227 நாட்களில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். ஆனால், அப்போது இந்த விதி அமலில் இல்லை.

இந்திய அளவில் மிக இளம் வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் பெற்ற வீரர் சச்சின் டெண்டுல்கர் தான். அவர் தனது 16 வயது, 205 நாட்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு வைபவ் சூர்யவன்ஷிக்கு உள்ளது.

Story first published: Thursday, May 1, 2025, 12:02 [IST]
Other articles published on May 1, 2025
English summary
IPL Star Vaibhav Suryavanshi Cannot Play for India Immediately Due to ICC Age Limit
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+