சென்னை: ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் சுரேஷ் ரெய்னா. அதேபோல அதிக விக்கெட் வீழ்த்தியவர் ஆர்.பி. சிங். அதிகபட்ச தனி நபர் ஸ்கோரை எடுத்தவர் பிரன்டன் மெக்கல்லம். சிறப்பான பந்து வீச்சைக் கொடுத்தவர் ரவிச்சந்திரன் அஸ்வின்.
ஐபிஎல் சாதனைகள் விவரம்
அதிக ரன் குவித்தவர்கள்
வீரர் - அணி - ரன்கள் - அதிகபட்சம்
சுரேஷ் ரெய்னா - சென்னை - 1375 - 98
ஆடம் கில்கிறைஸ்ட் - டெக்கான் - 1220 - 109
டெண்டுல்கர் - மும்பை - 1170 - 89
ரோஹித் சர்மா - டெக்கான் - 1170 - 76
ஜெக்கஸ் கல்லிஸ் - பெங்களூர் - 1132 - 89
அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்
வீரர் - அணி - விக்கெட்கள் - சிறப்பு
ஆர்.பி. சிங் - டெக்கான் - 51 - 4/22
பிரக்யான் ஓஜா - டெக்கான் - 49 - 3/21
இர்பான் பதான் - பஞ்சாப் - 47 - 3/24
ஷான் வார்னே - ராஜஸ்தான் - 44 - 4/21
அமித் மிஸ்ரா - டெல்லி - 42 - 5/17
தனி நபர் அதிகபட்ச ஸ்கோர்
வீரர் - அணி - ரன்கள் - ஆண்டு
பி.மெக்கல்லம் - கொல்கத்தா - 158 - 2008
முரளி விஜய் - சென்னை - 127 - 2010
சைமண்ட்ஸ் - டெக்கான் - 117 - 2008
மைக்கேல் ஹஸ்ஸி - சென்னை - 116 - 2008
ஷான் மார்ஷ் - பஞ்சாப் - 115 - 2008
ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் - சென்னை சூப்பர் கிங்ஸ் - 246/5 (ராஜஸ்தானுக்கு எதிராக, 2010)
ஒரு அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் - ராஜஸ்தான் ராயல்ஸ் - 58 ஆல் அவுட் (பெங்களூருக்கு எதிராக, 2009)
அதிக சிக்ஸர்கள் விளாசியவர் - ஆடம் கில்கிறைஸ்ட் - டெக்கான் சார்ஜர்ஸ் - 64
அதிக கேட்ச் செய்தவர் - சுரேஷ் ரெய்னா - சென்னை சூப்பர் கிங்ஸ் - 27
அதிக வெற்றிகளைக் கண்ட அணி- சென்னை சூப்பர் கிங்ஸ், 26 வெற்றி, 20 தோல்வி, 1 முடிவில்லை