Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மறுபடியும் அதே பிரச்சினையா??.. ஐபிஎல் அணிகளுக்கு ஆப்பு வைத்த இரு நாடுகள்.. அடுத்த நடவடிக்கை என்ன?

மும்பை: ஐபிஎல் வீரர்கள் ஏலம் நெருங்கி வரும் சூழலில் அனைத்து அணிகளுக்கும் அயல்நாட்டு வாரியங்கள் சிக்கலை உண்டாக்கியுள்ளன.

2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டன. பொல்லார்ட், பிராவோ போன்ற வீரர்கள் தங்களது ஓய்வு அறிவிப்பினையும் வெளியிட்டிருந்தனர்.

ஐபிஎல் மினி ஏலம்

ஐபிஎல் மினி ஏலம்

10 அணிகளையும் சேர்த்து மொத்தமாக 87 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படவுள்ளனர். இதற்காக உலகம் முழுவதும் இருந்து 991 வீரர்கள் தங்களது பெயர்களை விண்ணப்பித்திருந்தனர். இதில் இருந்து தற்போது 405 வீரர்கள் மினி ஏலத்திற்காக இறுதி செய்யப்பட்டுள்ளனர். அடிப்படை தொகையின் கீழ் இந்த 405 வீரர்களும் பிரிக்கப்பட்டுள்ளதால் அணிகள் தங்களது வியூகங்களை வகுக்க மும்முரமாகி வருகின்றன.

புதிய பிரச்சினை

புதிய பிரச்சினை

இந்நிலையில் அணி நிர்வாகங்களுக்கு புதிய சிக்கல் உண்டாகியுள்ளது. அதாவது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்களா? என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இதற்கு காரணம் என்.ஓ.சி படிவம் தான். வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியங்களின் சார்பில் தரப்படும் அனுமதி படிவம் இன்னும் வழங்கப்படவில்லை.

காரணம் என்ன

காரணம் என்ன

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இங்கிலாந்து தான் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதன்படி பார்த்தால் மே மற்றும் ஜூன் மாதங்களில் இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் தொடர் உள்ளது. இதில் பென் ஸ்டோக்ஸ், சாம் கரண் உள்ளிட்ட பல முக்கிய வீரர்கள் பங்கேற்க வேண்டும் என்பதால், ஐபிஎல்-ன் முக்கிய போட்டிகள் நெருங்கும் போது அவர்கள் நிச்சயம் பங்கேற்க முடியாமல் போகும். ஐசிசி கோப்பையா? ஐபிஎல் ஆ? என வரும் போது ஐபிஎல்-க்கு பலம் குறையும் என்பதை அனைவரும் அறிந்ததே.

ஆஸ்திரேலியாவின் சிக்கல்

ஆஸ்திரேலியாவின் சிக்கல்

இதே போல ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் சிக்கல் உள்ளது. 50 ஓவர் உலகக்கோப்பை 2023ம் ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கு தயாராவதற்காக ஆஸ்திரேலிய அணிக்கு பல போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே வீரர்களின் பணிச்சுமையை குறைக்க, ஐபிஎல்-ல் பங்கேற்க வேண்டாம் என வாரியத்திடம் இருந்து அறிவுறுத்தப்படவுள்ளதாக தெரிகிறது. அந்த அணியின் நட்சத்திர வீரர் கேமரூன் க்ரீன் சமீபத்தில் இதுகுறித்து வெளிப்படையாகவே பேசியிருந்தார்.

பிசிசிஐ பதில்

பிசிசிஐ பதில்

இந்த பிரச்சினை குறித்து விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ நிர்வாகம், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வீரர்களின் பங்கேற்பு குறித்து ஆலோசித்து விட்டு, விரைவில் அனைத்து அணிகளுக்கும் தகவல் கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளது. ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது தொடரில் இருந்து வெளியேறினால் மட்டுமே மாற்று வீரரை வாங்கிக்கொள்ள முடியும். சில போட்டிகளில் விளையாடாமல் போனால் எதுவும் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 14, 2022, 16:09 [IST]
Other articles published on Dec 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+