2 அடுக்குகள் முழுவதும் புக்கிங்.. கேரள தீவில் நடக்கும் ஐபிஎல் ஏலம்..அணிகளுக்கு ஸ்பெஷல் மீட்டிங் ரெடி
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏலத்திற்கான இறுதிகட்ட ஏற்பாடுகளில் பிசிசிஐ மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இந்த முறை கேரள மாநிலம் கொச்சியில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதற்காக அனைத்து அணிகளும், எந்தெந்த வீரர்களை ஏலம் எடுக்கலாம் என்ற கடைசி கட்ட வியூகங்களை வகுத்து வருகின்றன. குறிப்பாக சிஎஸ்கேவின் பணிகளை தோனி முடித்துக்கொடுத்துவிட்டதாக தெரிகிறது.

ஐபிஎல் மினி ஏலம்
ஐபிஎல்-ன் 10 அணிகளும் ஏற்கனவே சுமார் 163 வீரர்களை தக்கவைத்துக்கொண்டுள்ளன. இதற்காக ரூ.743.5 கோடியை செலவளித்துவிட்டன. மீதமுள்ள 87 வீரர்களின் இடங்களை நிரப்புவதற்கே இந்த மினி ஏலமானது நடைபெறவுள்ளது. இதில் அயல்நாட்டு வீரர்களுக்கு 30 இடங்கள் உள்ளன. இதற்காக உலகம் முழுவதும் இருந்து 991 வீரர்கள் விண்ணப்பித்த சூழலில் 405 வீரர்கள் ஏலத்திற்கு இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

மினி தீவு
இந்நிலையில் ஏலத்திற்காக ஓட்டல் அறைகளும் புக் செய்யப்பட்டுவிட்டன. கொச்சியில் உள்ள பால்கட்டி எனும் தனித்தீவுப்பகுதியில் கிராண்ட் ஹயாத் ஓட்டல் உள்ளது. இங்குள்ள 2 தளங்கள் முழுவதுமாக ஐபிஎல் நிகழ்ச்சிகளுக்காக புக் செய்யப்பட்டுள்ளன. வரும் டிசம்பர் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பிசிசிஐ சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகள் அங்கு தொடர்ந்து நடைபெறும் கூறப்பட்டுள்ளது.

ஸ்பெஷல் மீட்டிங்
டிசம்பர் 21ம் தேதியன்றே அனைத்து அணிகளின் உயர்மட்ட நிர்வாகிகளும், பயிற்சியாளர்களும் ஓட்டலுக்கு சென்றடையவுள்ளனர். அங்கு அவர்களுக்காக ஸ்பெஷல் மீட்டிங் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவின் சில வீரர்கள் பங்கேற்பதில் குழப்பங்கள் இருந்து வருகின்றன. எனவே அவர்களின் பங்கேற்பு குறித்து விளக்கம் கொடுக்கப்படவுள்ளன.

ஒத்திகை ஏலம்
இதனையடுத்து டிசம்பர் 22ம் தேதி ஒளிபரப்பு நிறுவனங்களுடன் மீட்டிங் உள்ளன. அதில் மினி ஏலம் எப்படி நடக்கும் என ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும். இந்த முறை வித்தியாசமாக தொலைக்காட்சி ஒளிபரப்பை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், டிஜிட்டல் உரிமையை ஜியோ சினிமா நிறுவனமும் கைப்பற்றியுள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications