Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டாடா, ஜியோவை தூக்கி அடித்த ட்ரீம் 11.. சத்தமே இல்லாமல் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பிடித்தது!

மும்பை : 2020 ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெற பல பெரிய நிறுவனங்கள் போட்டியிட்டு வந்த நிலையில் ட்ரீம் 11 எனும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனம் அதை வென்றது.

Recommended Video

IPL 2020: Dream11 bags title sponsorship | OneIndia Tamil

2௦20 ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சர் ஆனது ட்ரீம் 11. இந்த ஒப்பந்தம் டிசம்பர் 11 வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி

போட்டி

டாடா சன்ஸ், ரிலையன்ஸ் ஜியோ, பதஞ்சலி, பைஜூஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் போட்டியில் வெல்லும் என கூறப்பட்ட நிலையில் ட்ரீம் 11 சத்தமே இல்லாமல் அதை கைப்பற்றி உள்ளது.

விவோ விலகல்

விவோ விலகல்

விவோ மொபைல் நிறுவனம் பாதியில் தங்கள் விளம்பர ஒப்பந்தத்தில் இருந்து விலகியதை அடுத்து பிசிசிஐ அடுத்த விளம்பரதாரரை தேடி வந்தது. விவோ 440 கோடி அளித்த நிலையில், ஆகஸ்ட் 18 முதல் டிசம்பர் 31 வரை உள்ள காலத்திற்கு குறைந்த தொகைக்கு ஸ்பான்சரை தேடி வந்தது பிசிசிஐ.

222 கோடி

222 கோடி

தற்போது ட்ரீம் 11 222 கோடி கொடுத்து அந்த ஒப்பந்தத்தை கைப்பற்றி உள்ளது. விவோ கொடுத்த தொகையை விட இது பாதி அளவு தான் என்றாலும், இது இந்த ஆண்டின் மீதமுள்ள நாட்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு யார்?

அடுத்த ஆண்டு யார்?

இந்த ஒப்பந்தம் ஐபிஎல் தொடர் முடிந்த பின்னும் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும். அதன் பின் விவோ மீண்டும் தன் விளம்பர ஒப்பந்தத்தை தொடருமா? அல்லது ட்ரீம் 11 உடன் பிசிசிஐ ஒப்பந்தத்தை நீட்டிக்குமா? என்பது புரியாத புதிராக உள்ளது.

ட்ரீம் 11 ஐபிஎல்

ட்ரீம் 11 ஐபிஎல்

ட்ரீம் 11 ஏற்கனவே ஐபிஎல் தொடரில் ஒரு விளம்பரதாரராக உள்ள நிலையில், தற்போது டைட்டில் ஸ்பான்சராகவும் ஆகியுள்ளது. இந்த ஆண்டு "ட்ரீம் 11 ஐபிஎல்" என்றே ஐபிஎல் தொடர் அழைக்கப்படும். ட்ரீம் 11 நிறுவனத்தின் விளம்பர தூதராக தோனி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, August 18, 2020, 16:39 [IST]
Other articles published on Aug 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+