பெங்களூரு : இந்த குறிப்பிட்ட மேட்ச் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக நடைபெற்றது.ஸ்டேடியத்தில் கூடியிருந்த ரசிகர்களுக்கும், டிவிகளுக்கு எதிரில் குழுமியிருந்தவர்களுக்கும், இந்த மேட்ச் கொடுத்த ரிசல்ட் திகைப்பு அடைய வைத்தது என்றால் மிகையாகாது.
T 20 மேட்ச்சுக்கள் விறுவிறுப்பாக செல்ல கூடியவை. டாஸ் யார் ஜெயிக்கிறார்கள், என்ன முடிவு செய்கிறார்கள், முதல் பந்து துவங்கி, கடைசி பந்து வரை ஆர்வம், சஸ்பென்ஸ், திரில், மகிழ்ச்சி,ஏமாற்றம் என்று பல வகை சூழ்நிலைகளில் நடை பெரும் மேட்ச்சுடன் travel செய்வது தனி அனுபவம், அதுவும் IPL மேட்ச்சுக்களுக்கு.

ஒவ்வொரு மேட்சின் பொழுதும், இந்த வகை கலவை இருக்கும்.இப்படி பட்ட சூழ்நிலையில் நடைப் பெற்ற IPL மேட்ச் இது.
23.04.2017
ஈடன் கார்டான்ஸ் மைதானம் கொல்கத்தா
ராயல் சேலேன்ஜர்ஸ்.பெங்களூர் , கல்கட்டா நயிட் ரைடர்ட்ஸ்
ஆர் சி பி அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.
கே கே ஆர் அணி துவக்க வீரர்கள் சுனில் நரின், கவுதம் கம்பிர் களம் இறங்கினர்.
ஆர் சி பி அணியின் சாமுவேல் பத்ரீ முதல் ஓவர் வீசினார். பேட்ஸ்மன்கள் இருவரும் அதிரடி ஆட்டம் ஆட ரன்கள் வர துவங்கின.
நான்காவது ஓவரில் முதல் விக்கெட் விழுந்தது. ஸ்கோர் 48 - 1
முன்னதாக, மேட்சின் முதல் ஓவரிலேயே அவருடைய எண்ணம் என்ன என்பதை தெளிவு படுத்தி விட்டார், சுனில் நரின். ஆட்டத்தின் துவக்க
ஓவரே ரசிகர்களுக்கு மிக சிறந்த பேட்டிங் விருந்தாக அமைந்தது.
சாமுவேல் பத்ரீ போட்ட முதல் ஓவரின் முதல் மற்றும் கடைசி பந்துக்கள் ரன்கள் பெற்று தரவில்லை.இரண்டாம் பந்து 4 நேர்த்தியான பவுண்டரி கவர், மிட் ஆப் பகுதிகளுக்கு நடுவில்மூன்றாம் பந்தும் 4 தூக்கி அடிக்கப் பட்ட பவுண்டரி
நான்காம் பந்து 4 புல்லட் மாதிரி பாயந்து சென்ற கவர் பவுண்டரி
ஐந்தாம் பந்து 6 அதிர செய்த லாங் ஆன் பகுதியிலில் இறங்கிய சிக்ஸர்.
முதல் ஓவர் முடிவில் கே கே ஆர் அணியின் ஸ்கோர் 18 / 0
சுனில் நரின் 18
கவுதம் கம்பிர் 0
இரண்டாவது ஓவர் முடிவில் மில்ஸ் வீசிய 5 வது பந்தை கம்பிர் அடித்தார் ஒரு 6.
ஆர் சி பி அணியின் மூன்றாவது ஓவர் அரவிந்த் வீசினார். இந்த ஓவரில் கம்பிர் ஒரு 4 ,
சுனில் நரின் இரண்டு 4 அடித்தனர்.
மில்ஸ் வீசிய அடுத்த ஓவரில் கம்பிர் அவுட். ஜாதவ் கேட்ச் பிடித்தார்.
14 ( 11 பந்துக்கள். 1 x 4 & 1 x 6 )
5 வது ஓவர் முடிவில் ஸ்கோர் கே கே ஆர் அணி 56 / 1
சுனில் நரின் 30
உதப்பா 6
6 வது ஒவரில் இரண்டு 4. சுனில் நரின் மற்றும் உதப்பா, தலா ஒரு பவுண்டரி.
பின்னி வீசிய நான்காவது பந்தில் நரின் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
34 ( 17 பந்துக்கள். 6 x 4 & 1 x 6 )
7 வது ஓவரில் உதப்பா அவுட். LBW பத்ரீ.
11 ( 9 பந்துக்கள். 2 x 4 )
சுனில் நரின் அவுட் ஆனவுடன் ரன்களின் வேகம், எண்ணிக்கை வெகு வாக குறைந்து விட்டது. அவர் பேட்டிங் ஆடிய வரையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி, கொண்டாட்டம். ஓவர் முடிவில் ஸ்கோர் 68 / 3
யூசப் பத்தான் 1
மனிஷ் பாண்டே 2
8 வது ஓவரில் 5 ரன்களும், 9 வது ஓவரில் 6 ரன்களும், 10 வது ஓவரில் 8 ரன்களும் கிடைத்தன.10 வது ஓவரில் பத்தான், ஜாதவ் கேட்ச் பிடிக்க அவுட் ஆனார். சஹல் பவுலர். 8 ( 8 பந்துக்கள் )
ஸ்கோர் 87 / 4
யாதவ் 3
பாண்டே 10
ஆர் சி பி அணி பவுலர்கள் நன்றாக பந்துக்கள் வீசினர். கே கே ஆர் வீரர்களால் ஒவ்வொரு ஓவருக்கும் அதிக படியான ரன்கள் ஸ்கோர் செய்ய முடியவில்லை.
12 வது ஓவர் ஆர் சி பி அணிக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. இந்த ஓவரில் ஒரே ஒரு ரன் மட்டும் தான் கே கே ஆர் அணிக்கு கிட்டியது.
அதை விட முக்கியமானது, சஹல் மிக அருமையாக இந்த ஓவரில் பந்துக்கள் வீசினார். அவருக்கு கிடைத்த விக்கெடுக்கள் 2. மனிஷ் பாண்டே தனக்கு வீசப் பட்ட பந்தை அடிக்க கேட்ச் பிடித்தது பத்ரீ.
15 ( 16 பந்துக்கள். 1 x 4 )
ஓவரின் மூன்றாவது பந்தில் காலின் டி கிராந்தோம்மே ஸ்லிப்பில் நின்று கொண்டு இருந்த கோலியின் கையில் கேட்ச் கொடுத்து விட்டு பெவிலியன் திரும்பினார். ரன் எதுவும் எடுக்க வில்லை.
ஓவர் முடிவில் ஸ்கோர் 94 / 6
ரன்கள் வருகை குறைவாகவே இருந்தன. இந்த நிலைமை கே கே ஆர் அணியை கவலைக் கொள்ள வைத்தது. இருக்கும் ஓவர்களில் விக்கெடுக்கள் இழக்காமல், ரன்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டனர் கே கே ஆர் அணி வீரர்கள்.
அதே சமயம் மேலும் அதிக அழுத்தம் கொடுத்து விக்கெடுக்களை கைப்பற்றவும் , ரன்கள் எடுப்பதை கட்டுப் படுத்தும் முனைப்பில் இருந்தனர் ஆர் சி பி அணி வீரர்கள்.
16 வது ஓவர் முடிவில் ஸ்கோர் 116 / 6
யாதவ் 13
ஓக்ஸ் 14
அடுத்த ஓவரில் ஓக்ஸ், மில்ஸ் பந்தில் அவுட். கேட்ச் பிடித்தவர் மந்தீப் சிங். மேலே தூக்கி அடித்த பந்து கீழே இறங்கும் பொழுது பிடிக்கப் பட்டது.
18 ( 21 பந்துக்கள். 3 x 4 )
4 ரன்கள் மட்டும் கிடைத்த 18 வது ஓவர் கே கே ஆர் அணிக்கு பாதகமாகவும், ஆர் சி பி அணிக்கு சாதகமாகவும் அமைந்தது. ஆம். கே கே ஆர் அணி விக்கெட்டுக்களை இழந்தனர். ஒன்று அல்ல இரண்டு.நெகி போட்ட பந்தில், டி வில்லியர்ஸ் பிடித்த கேட்சில் அவுட் ஆனது நாதன் கோல்டர். எடுத்தது ரன்கள் 2.
சூர்ய குமார் யாதவ், மில்ஸ் கேட்ச் பிடிக்க அவுட்.
15 ( 19 பந்துக்கள். 1 x 4 )
18 வது ஓவர் முடிவில் ஸ்கோர் 126 / 9
19 வது ஓவரில் கூடிய ரன்கள் 5.
கடைசி 20 வது ஓவர். அரவிந்த் பந்து போட்டார் 3 வது பந்தில் கே கே ஆர் அணி ஆல் அவுட். ஆம் கடைசி விக்கெட் விழுந்தது. குல்தீப் எடுத்த ரன்கள் 4
உமேஷ் யாதவ் 2*
ஸ்கோர் 131.
ஆர் சி பி அணியில் பவுலிங் வீசிய 6
பவுலர்களும் விக்கெட்டுக்கள் எடுத்தனர்
சாமுவேல் பத்ரீ 1 / 33
மில்ஸ் 2 / 31
அரவிந்த் 1 / 27
ஸ்டுர்ட் பின்னி 1 / 9
சஹல் 3 / 16
நெகி 2 / 15
துவக்கத்தில் இருந்த ஆட்டம் போகப் போக
குறைந்து, 180 ரன்களுக்கு மேல் எடுக்கப் படும் என்று.எதிர் பார்த்த கே கே ஆர் ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஆகியது.வெற்றி பெற குறைந்த ரன்களே என்ற நிலையில் ஆர் சி பி அணி.துவக்க வீரர்களான கிறிஸ் கேலும், கேப்டன் விராட் கோலியும் ஆட்டத்தை துவக்கினர்.
அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது.முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் ரன்கள் எதுவும் எடுக்காமல் கேப்டன் விராட் கோ லி அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். பவுலர் கோல்டர் நைல்.கேட்ச் பிடித்தது பாண்டே.
விராட் கோலி அவர் எதிர் கொண்ட முதல் பந்திலேயே அவுட். மைதானம்.அதிர்ந்தது..மிக முக்கியமான விக்கெட் ஆயிற்றே.
இரண்டாவது ஓவரில் கிடைத்த ரன்கள் 4. இழந்த விக்கெட் 1. உமேஷ் யாதவ் போட்ட பந்தில் பாயிண்ட் பகுதியில் நின்று கொண்டிருந்த பீல்டர் பாண்டே கையில் கேட்ச் கொடுத்தது மந்தீப் சிங். எடுத்த ரன் 1.
ஆர் சி பி அணி துவக்கத்திலேயே 2 ஓவர்களில், 2
விக்கெட்டுக்களை இழந்து தவித்தனர்.
ஸ்கோர் 7 / 2
கேல் 0
டி வில்லியர்ஸ் 4
3 வது ஓவரில் ஆர் சி பி அணி ஸ்கோர் அதிகரித்தது. 15 ரன்கள்.
மூன்று பவுண்டரிகள். பந்து வீசியவர் கோல்டர் நைல்.
டி வில்லியர்ஸ் ஒரு 4.
ஜாதவ் இரண்டு 4
டி வில்லியர்ஸ் அவுட். கேட்ச் பிடித்தது உதப்பா.
8 ( 6 பந்துக்கள். 2 x 4 )
3 வது ஓவர் முடிவில் ஸ்கோர் 22 / 3
ஜாதவ் 8
கேல் 1
கே கே ஆர் அணி கொடுத்த 132 ரன்கள் இலக்கு, ஆர் சி பி அணி வீரர்களுக்கு கடினமாக தோன்றவில்லை துவக்கத்தில்.ஆனால் 3 விக்கெடுக்களை இழந்த நிலையில், ஆர் சி பி வீரர்களை கவலைக் கொள்ள வைத்தது.
இருந்த பொழுதிலும், அதிரடி வீரர் கேல் விளையாடிக் கொண்டு இருப்பது பெரும் நம்பிக்கையை அளித்தது.
4 வது ஓவர் ரன்கள் 2
5 வது ஓவர் ரன்கள் 4
பின்னி அடித்த பவுண்டரி.
ஆனால் இந்த ஓவரின் முதல் பந்திலே.யே ஆர் சி பி அணிக்கு பின்னடைவு. ஜாதவ் அவுட். கேட்ச் பிடித்தது ஓக்ஸ். பவுலர் கோல்டர் நைல்.
9 ( 7 பந்துக்கள். 2 x 4 )
ஆர் சி பி அணி ஆட்டம் காண ஆரம்பித்தது.
5 வது ஓவர் முடிவில் ஸ்கோர் 28 / 4
இவ்வளவு மட்டமாக ஆர் சி பி வீரர்கள் விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை. இவர்களுடைய இந்த மாதிரியான ஆட்டம் ரசிகர்களை அதிர வைத்தது.
சிக்ஸர்கள், பவுண்டரிகளை எதிர் பார்த்த ரசிகர்களுக்கு அதற்கு பதிலாக ஒவ்வொரு பேட்ஸ்மனும் அவுட் ஆகி திரும்புவது வருத்தத்தையும், வேதனையையும் அளித்தது.
இரண்டு பவுண்டரிகள் அடிக்கப் பட்டன அடுத்த ஓவரில். கேல், பின்னி அடித்தனர், உமேஷ் யாதவ் பவுலிங்கில்.7 வது ஓவர் ஆர் சி பி அணிக்கு நிம்மதி அளிக்கவில்லை. இரண்டு விக்கெட்டுக்கள் விழுந்தன.
ஸ்கோர் 40 / 6
ஓக்ஸ் போட்ட பந்தில் முதலில் அவுட் ஆனவர் கிறிஸ் கேல். கேட்ச் பிடித்தது நைல். மிட் விக்கெட் பகுதிக்கு அடிக்க சென்று மிட் ஆப் பகுதியில் கேட்ச் கொடுத்தார் கேல்.
7 ( 17 பந்துக்கள். 1 x 4 )
மிகவும் எதிர் பார்க்கப் பட்ட கிறிஸ் கேல் பெரிதும் ஏமாற்றினார். 17 பந்துக்கள் விளையாடிய கேல் ஒரே ஒரு 4 மட்டும்தான் அடித்தது, கேலின் திறமைக்கு பொருந்தவே இல்லை என்று பல ரசிகர்கள் கோவப்பட்டார் கள்.
ஓவரின் 5 வது பந்தில் பின்னி அவுட். உதப்பா கேட்ச் பிடித்தார்.
8 ( 9 பந்துக்கள் )
8 வது ஓவரில் கிடைத்த ரன்கள் 3. விக்கெட் 1.
டி கிராந்தோம்மே பவுலர்.
அவுட் ஆனவர் நெகி. LBW. ரன்கள் 2.
ஸ்கோர் 43 / 7
மில்ஸ் 1
பத்ரீ 0
அடுத்த ஓவர் வீசியவர் ஓக்ஸ். 5 ரன்கள். 1 விக்கெட்.
அரவிந்த் ஒரு 4 அடித்தார் . கவர் பகுதியில்.
அவுட் ஆனவர் பத்ரீ. LBW. 0
9 வது ஓவர் முடிவில் ஆர் சி பி அணி ஸ்கோர் 48 /8
10 வது ஓவர் முடிவதற்குள், மேட்ச் ஓவர்.
இந்த ஓவரை போட்டவர்
டி கிராந்தோம்மே.
முதல் பந்தில் மில்ஸ் அவுட். கேட்ச் பிடித்தவர் குல்தீப் யாதவ். லாங் ஆபில் இருந்து ஓடி வந்து, ஓடிய படியே மிக அருமையான கேட்ச் பிடித்து அசத்தினார்.
2 ரன்கள்.
ஓவரின் நான்காவது பந்தில் அவுட் ஆனவர் சஹல். பாண்டே கேட்ச் பிடித்தார். ரன் எடுக்கவில்லை. 0.
அரவிந்த் நாட் அவுட் 5*
ஆர் சி பி அணி
ஆல் அவுட் 49.
அதிக ரன் ஆன 9 எடுத்தவர் கேதார் ஜாதவ்.
கே கே ஆர் பவுலிங்
நாதன் கோல்டர் நைல்
3 - 21
உமேஷ் யாதவ் 1 -15
கிறிஸ் ஓக்ஸ் 3 - 6
கிராந்தோம்மே 3 - 4
40 ஓவர்கள் முழுவதும், அதிரடி கலந்து, பவுண்டரிகள், சிக்ஸர்கள், அதிக பட்ச ரன்கள், வெற்றி இலக்கை நோக்கி விரு விருப்பான போராட்டம் போன்றவற்றை காண விரும்பிய ரசிகர்களுக்கு, மொத்த மேட்ச்சும் 30 ஓவர்களுக்குள் முடிவடைந்தது அதிர்ச்சியுடன்
ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது.
கே கே ஆர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில்.
வென்றது.ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப் பட்டவர் நாதன் கோர்ட்லர் நைல்.
ஆர் சி பி அணி இந்தகைய ஆட்டத்தை எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள். கே கே ஆர் அணியும் அவ்வாறே.
வாசுதேவன், பெங்களூரு