பங்காளிகளா, ரொம்பத் துள்ளாதீங்க.. வருவேன், வச்சு வெளுப்பேன்... கெய்ல் வார்னிங்!
பெங்களூரு: பந்து வீச்சாளர்களே காத்திருங்கள், விரைவில் பெரிய விருந்தோடு வருகிறேன் என்று கூறியுள்ளார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல்.
9வது ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட கெய்ல் ஜொலிக்கவில்லை. சில போட்டிகளில் அவர் ஆடவில்லை. ஆடிய போட்டிகளிலும் சிங்கிள் டிஜிட்டில்தான் ஸ்கோர் செய்கிறார். கெய்ல் கதை முடிந்து விட்டது என்று கூட பலரும் சொல்லத் தொடங்கி விட்டனர்.
இந்த நிலையில்தான் தனது பார்ம் இன்னும் போகவில்லை என்பதை கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சற்றே வெளிப்படுத்தினார் கெய்ல். நேற்றைய போட்டியில் 31 பந்துகளில் 49 ரன்களைக் குவித்தார் கெய்ல்.

1-0-7-5-6
இதுவரை நடந்த போட்டிகளில் இதற்கு முன்பு ஆடிய 5 போட்டிகளிலும் முறையே 1,0,7,5,6 என்றுதான் ரன்கள் எடுத்திருந்தார் கெய்ல். நேற்றுதான் அவர் வழக்கமான பாணியிலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

நான் ரெடி
போட்டிக்குப் பின்னர் கெய்ல், ஐபிஎல் இணையதளத்திற்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், நான் எப்போதுமே எனது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தவே விரும்புவேன். இப்போது எனது அதிரடியை காணும் வாய்ப்பு ரசிகர்களைத் தேடி வருகிறது.

புயலுக்கு முந்தைய அமைதி
புயலுக்கு முன்பு எப்போதும் அமைதி நிலவும். நானும் அதுபோலத்தான். ரன்கள் வர சற்று தாமதமாகி வந்தது. தற்போது அது வரத் தொடங்கி விட்டது. ரசிகர்கள் இனி அனுபவித்துப் பார்க்கலாம்.

பெரிய விருந்து காத்திருக்கிறது
கெய்ல் புயலைக் காண பெங்களூர் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அது பெரிய விருந்தோடு வருகிறது என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பந்து வீச்சாளர்களுக்கும்தான்.

நான் உலக நாயகன்
நான் சாதாரண நாயகன் அல்ல, உலக நாயகன். எனவே மிகப் பெரிய விருந்தை என்னிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். என்னிடமிருந்து நிறைய ரன்களை இனி அவர்கள் பார்க்கலாம் என்றார் கெய்ல்.
சும்மா பேசிட்டிருக்காதீங்க பாஸு.. ரன் எடுத்துக் காட்டுங்க!


Click it and Unblock the Notifications