ஐபிஎல்-3 மூலம் ரூ. 4700 கோடி கிடைக்கும் - லலித் மோடி
டெல்லி: ஐபிஎல் 3வது தொடர் மூலம் மிகப் பெரும் வருமானம் கிடைக்கும் என்று ஐபிஎல் கமிஷனர் லலித் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட ரூ. 4700 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மிகப் பெரிய ரசிகர் வட்டம், உலகளாவிய பிரபலம், பெரும் விளம்பரதாரர்கள் என்று பல்வேறு சிறப்பு அம்சங்கள் காரணமாக ஐபிஎல்லின் வர்த்தகம் மிகச் சிறந்த அளவில் உள்ளது.
இந்த ஆண்டு தொடர் சிறந்த முறையில் போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு ரூ. 4700 கோடி வருவாயை அது நெருங்கி விட்டது. கடந்த ஆண்டை விட இது இரண்டு மடங்கு அதிகமாகும்.
இது ஒவ்வொரு ஆண்டும் இரட்டிப்பாகிக் கொண்டே போகும். ரசிகர்களின் ஆதரவு பெருகப் பெருக ஐபிஎல்லின் பிராண்ட் வேல்யூவும் அதிகரிக்கும், வருவாயும் பெருகும்.
இந்த ஆண்டு தொடர் மூலம் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பும் சோனி நிறுவனத்திற்கு மட்டும் ரூ. 800 கோடி வருவாய் கிடைக்கும் என்றார் மோடி.


Click it and Unblock the Notifications