Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சோனி சிக்ஸ் சேனலில் தமிழில் ஐபிஎல் கிரிக்கெட் வர்ணனை.. இப்போவாவது புரியுற மாதிரி பேசுங்கப்பா!

மும்பை: 8 அணிகள் பங்கேற்கும் 9வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்த போட்டியை சோனி இ.எஸ்.பி.என், சோனி சிக்ஸ், சோனி மேக்ஸ் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

தமிழ், தெலுங்கு, பெங்காலி ஆகிய மொழி வர்ணனையுடன் சோனி சிக்ஸ் போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்ய இருக்கிறது. சோனி சிக்ஸ் சேனலில் நமக்கு இம்மூன்று மொழிகளில் எது தேவையோ அதை தேர்வு செய்துகொள்ள வசதி உள்ளது.

IPL will have commentary in Hindi, Telugu, Tamil and Bengali

சோனி இ.எஸ்.பி.என் சேனல் ஆங்கிலத்திலும், சோனி மேக்ஸ் சேனல் ஹிந்தியிலும் வர்ணனை செய்ய உள்ளது. தமிழ் வர்ணனையாளர் குழுவில் முன்னாள் வீரர்கள் எஸ்.ரமேஷ், ஹேமங் பதானி, வி.பி.சந்திரசேகர் மற்றும் ஆர்.பட்டாபிராமன், கே.வி.சத்யநாராயணன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இவர்கள் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை விஜய் டிவி வாயிலாக தமிழில் வர்ணனை செய்தனர். இவர்கள் பேசும் தமிழ், பேச்சு தமிழில் இருந்து மாறுபட்டு இருப்பதாக ரசிகர்கள் முணுமுணுத்தனர். இம்முறையாவது நல்ல தமிழில் பேசுவார்களா என்பது இன்று இரவு தெரியும்.

Story first published: Saturday, April 9, 2016, 11:00 [IST]
Other articles published on Apr 9, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+