ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்... கொல்கத்தாவின் மகிழ்ச்சி தொடருமா?

காரணம், அவருக்குச் சொந்தமான, கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்தான் முதலிடத்தில் உள்ளது, இது வரை நடந்த லீக் ஆட்ட புள்ளிவிவரப் பட்டியலில்.
இந்த வெற்றிப் பயணம் இன்றும் தொடருமா... என்ற கேள்வி எழுந்துள்ளது.
காரணம், டெண்டுல்கர் தலைமையிலான மும்பை அணியையும் தோணியின் தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னையையும் தோற்கடித்து ரசிகர்களை அதிர வைத்த கொச்சி அணியுடன் இன்று மோதுகிறது கொல்கத்தா.
கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடக்கிறது இந்தப் போட்டி.
ஐ.பி.எல்.-ல் அறிமுக அணியாக இறங்கிய மஹேல ஜெயவர்தனா தலைமையிலான கொச்சி அணி முதல் 2 ஆட்டங்களில் பெங்களூர் மற்றும் புனேக்கு எதிராக) தோல்வி கண்ட போது, பலவீனமான அணி என்று வர்ணயிக்கப்பட்டது. ஆனால் இப்போது பலமிக்க அணிகளுள் ஒன்றாக மாறியுள்ளது.
தற்போது கொல்கத்தா, கொச்சி இரு அணிகளும் முழு வேகத்துடன் இருப்பதால் யாருடைய வெற்றிப்பயணம் முடிவுக்கு வரும் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
ஈடன்கார்டனில் சில தினங்களுக்கு முன்பு நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 81 ரன்களில் சுருண்டதால், ஆடுகளம் குறித்து சர்ச்சை ஏற்பட்டது. இது சிறந்த ஆடுகளமாக இல்லை என்று வார்னே புகார் கூறினார். இதையடுத்து இந்த ஆட்டத்திற்கு இன்னொரு பிட்ச் பயன்படுத்தப்பட உள்ளது. இது இரு அணிக்கும் சவால் அளிக்கக்கூடிய சிறந்த ஆடுகளமாக இருக்கும் என்று பிட்ச் பராமரிப்பாளர் கூறியுள்ளார்.
டெண்டுல்கரை வீழ்த்துவாரா யுவராஜ்?
முன்னதாக இன்று மாலை 4 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் லீக் ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், அறிமுக அணியான யுவராஜ்சிங் தலைமையிலான புனே வாரியர்சும் மோதுகின்றன. தொடக்க ஆட்டங்களில் டெல்லி, பெங்களூர் அணிகளை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, கொச்சி டஸ்கர்சிடம் மட்டும் தோற்றது.
இதே போல் தனது தொடக்க ஆட்டங்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொச்சி அணிகளை வீழ்த்திய புனே அணி டெல்லியிடம் மட்டும் போராடி வீழ்ந்தது. இதையடுத்து இவ்விரு 3-வது வெற்றியை குறி வைத்திருப்பது மட்டுமின்றி, மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் ஆவலில் உள்ளன.
மும்பை அணியில் கேப்டன் டெண்டுல்கர் அபார பார்மில் உள்ளார். 3 ஆட்டத்திலும் சேர்த்து ஒரு சதம் உள்பட 201 ரன்கள் குவித்து இருக்கும் அவர் இன்னும் ஒரு தடவை கூட ஆட்டம் இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புனே அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரைடர், கேப்டன் யுவராஜ்சிங் ஆகியோர் அசத்தி வருகிறார்கள். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் சுமித்தின் பார்ம் கவலையளிக்கும் வகையில் உள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:46 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications