Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக் பாண்டியா என்ன தக்காளி தொக்கா? வெளிப்படையாக பாரபட்சம் காட்டிய பிசிசிஐ.. கொந்தளித்த ரசிகர்கள்

மும்பை: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை தொடங்கும் நிலையில், பிசிசிஐ ஒரு செம டிவிஸ்ட் வைத்துள்ளது.

Recommended Video

Hardik Pandya-க்கு ஏன் கேப்டன் பதவி இல்லை? ரசிகர்கள் கேள்வி | *Cricket

அதன் படி கேஎல் ராகுல் தான் இந்திய அணியின் கேப்டனாக இந்த தொடருக்கு அறிவிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில், போட்டி தொடங்க இன்னும் 24 மணி நேரம் கூட இல்லாத நிலையில், புதிய கேப்டனாக ரிஷப் பண்டை பிசிசிஐ நியமித்துள்ளது.

சொதப்பிய ரிஷப் பண்ட்

சொதப்பிய ரிஷப் பண்ட்

பிசிசிஐயின் இந்த முடிவு ரிஷப் பண்ட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் இது சரியான முடிவு தானா என்ற குழப்பம, சாதாரண கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனெனில் ஐபிஎல் தொடரில் சொதப்பு, சொதப்பு என சொதப்பியவர் தான் ரிஷப் பண்ட். மும்பைக்கு எதிராக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஐபிஎல் போட்டியில் கைவசம் 2 ரிவியூ இருந்தும், அதனை எடுக்காமல் கோட்டை விட்டவர் தான் ரிஷப் பண்ட்.

சாம்பியன் பாண்டியா

சாம்பியன் பாண்டியா

மேலும் கேப்டன்ஷி அழுத்தத்தால் ஐபிஎல் தொடரில் பேட்டிங்கிலும் அவர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. ஆனால் மறு பக்கம், புதிய அணி, சாதாரண வீரர்கள் என அனைத்து கடினமான சூழலுக்கும் மத்தியில் ஹர்திக் பாண்டியா அணியை சிறப்பாக வழிநடத்தி ஐபிஎல் கோப்பையை வென்று தந்தார். கபில்தேவ் போல் சிறப்பாக செயல்பட்டார் என்று அனைவராலும் பாராட்ட பெற்றவர்.

எது வைத்து பதவி?

எது வைத்து பதவி?

ஆனால், அவருக்கு பிசிசிஐ துணை கேப்டன் பதவியை தான் தந்துள்ளது. இதன் மூலம் பிசிசிஐ, எதை வைத்து தான் கேப்டன் பதவி தருகிறார்கள் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. திறமையை வைத்து தான் கேப்டன் பதவியை தர வேண்டுமே தவிர, ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் என்பதற்காக கேப்டன் பதவியை ஒரு வீரருக்கு தரக் கூடாது.

கிரிக்கெட்டா? வியாபாரமா?

கிரிக்கெட்டா? வியாபாரமா?

அப்படி செய்தால், அதன் பெயர் கிரிக்கெட் அல்ல. வியாபாரம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். கால்பந்து அணியில் உள்ள ஒவ்வொரு நட்சத்திர வீரரும் கேப்டனாக இருக்க மாட்டார்கள். ஏன் என்றால் கேப்டன் சுமை, வீரர்களை பாதிக்க கூடாது என்பதற்காக அப்படி ஒரு நிலை எப்போது இந்திய கிரிக்கெட்டில் வரும் என்று தெரியவில்லை. விக்கெட் கீப்பரை கேப்டனாக நியமித்தால் மட்டும், அவர் அடுத்த தோனியாக வந்து விட மாட்டார்.

Story first published: Wednesday, June 8, 2022, 19:21 [IST]
Other articles published on Jun 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+