For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவர் ஒரு சிறந்த ஃபினிஷராக இருப்பார், தமிழக வீரருக்கு முக்கியத்துவம்... உண்மையை உடைத்த பஞ்சாப் அணி

சென்னை: பஞ்சாப் அணியில் அதிகம் செலவிட்டு 2 வீரர்கள் மீது மட்டும் தனி கவனம் செலுத்தியதற்கான பிளான் தெரியவந்துள்ளது.

நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலத்தில் மற்ற அணிகளை விட பஞ்சாப் அணி சிறப்பாக செயல்பட்டது. அந்த அணிதான் இருப்பதிலேயே அதிகமான ஏலத்தை எடுத்தது.

சச்சின், சேவாக் ஆட்டத்தை பார்க்க ரெடியாகுங்க மக்களே... இன்னும் 5 நாள் தான் இருக்கு! சச்சின், சேவாக் ஆட்டத்தை பார்க்க ரெடியாகுங்க மக்களே... இன்னும் 5 நாள் தான் இருக்கு!

இந்நிலையில் அவர்கள் எடுத்த வீரர்களில் 2 பேர் மீது மட்டும் தனிகவனம் செலுத்தி, புதிய ஸ்கெட்ச் ஒன்றை அணி நிர்வாகம் போட்டுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ்

ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்லாமல் இருக்கு பஞ்சாப் அணி, இந்தாண்டு புத்துணர்ச்சியுடன் களமிறங்குகிறது. அதற்கேற்றார் போல் அணியின் பெயரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்பதில் இருந்து பஞ்சாப் கிங்ஸ் ஆக மாற்றியது. மேலும், மேக்ஸ்வெல், கருண் நாயர், ஜகதீசன் சுசித், முஜீப் ரகுமான், ஜிம்மி நீஷம், கிருஷ்ணப்பா கௌதம் உள்ளிட்ட பல வீரர்களை அதிரடியாக கழட்டிவிட்டது.

லாபம்

லாபம்

நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்சமாக ரூ.53.2 கோடிக்கு 9 வீரர்களை பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. மேலும் ரூ.18.80 கோடி அவர்கள் மிச்சம் செய்து கையிருப்பு வைத்துள்ளனர். ஆஸ்திரேலிய அணி வேகப்பந்துவீச்சாளர் ஜேயி ரிச்சர்ட்சன் தான் அவர்களின் காஸ்ட்லியஸ்ட் ( ரூ.14 கோடி) வீரர் ஆவார். இவர் கடந்த பிக் பாஷ் தொடரில் அதிக விக்கெட் எடுத்த வீரர் ஆவார். 17 போட்டிகளில் 29 விக்கெட்களை எடுத்தார்.

பஞ்சாப் ஸ்கெட்ச்

பஞ்சாப் ஸ்கெட்ச்

ஜேயி ரிச்சர்ட்சனை எடுத்ததன் காரணம் குறித்து பேசிய பஞ்சாப் அணி நிர்வாகி சதீஷ் மேனன், நாங்கள் முதலில் எடுக்க நினைத்த கிறிஸ் மோரிஸை ராஜஸ்தான் வாங்கியது. இதனால் அடுத்த வீரராக ரிச்சர்ட்சனை எடுத்தோம். இவர் வைட் பால் கிரிக்கெட்டில் ஆட்டத்தின் எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக பந்துவீசி உதவுவார். அதே போல் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுபவர். எனவே பஞ்சாப்பிற்காக அவர் விளையாடுவதை எதிர்நோக்கியுள்ளோம் என தெரிவித்தார்.

தமிழக வீரர்

தமிழக வீரர்

பஞ்சாப் அணி, அறிமுக வீரர் ஷாருக்கானை ரூ.5.25 கோடிக்கு எடுத்தது வியப்பில் ஆழ்த்தியது. இதுகுறித்து பேசிய சதீஷ் மேனன், ஷாருக்கான் ஒரு சிறந்த வீரர். அவரின் திறமை மற்றும் தன்னம்பிக்கையை சமீபத்தில் நடைபெற்ற சையது முஷ்டக் கோப்பையில் பார்க்கலாம். அவர் சிறந்த ஃபினிஷராக எங்கள் அணிக்கு நீண்ட காலம் இருப்பார். அவரை எடுத்ததில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.

Story first published: Wednesday, March 3, 2021, 23:54 [IST]
Other articles published on Mar 3, 2021
English summary
Reason Behind Punjab Kings did two big signings is revealed
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X