ஐபிஎல்- அறிமுக போட்டியில் அதிரடி.. லக்னோவை பொளுந்து எடுத்த குஜராத்.. வெற்றியுடன் தொடங்கிய ஹர்திக்
மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் புதிய அணிகளான குஜராத், லக்னோ அணிகள் மோதிய ஆட்டத்தில் இளம் வீரர்கள் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
டாஸ் வென்று முதலில் பந்துவீசிய குஜராத் அணி, லக்னோ அணியின் முன்வரிசை பேட்டிங்கை காலி செய்தது.
முகமது ஷமியின் அனல் பறக்கும் பந்துவீச்சில் கேஎல் ராகுல், குயின்டன் டி காக், மணிஷ் பாண்டே ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தடுமாற்றம்
இதே போன்று அதிரடியாக விளையாட முற்பட்ட எவன் லீவிஸ் , சுப்மான் கில்லின் அபார கேட்சால் ஆட்டமிழந்தார். இதனால் லக்னோ அணி 29 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து களத்துக்கு வந்த தீபக் ஹூடா மற்றும் ஆயுஷ் படோனி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். குறிப்பாக தீபக் ஹூடா, பவுண்டரிகள், சிக்சர் என விளாசி ரசிகர்களை குதுகலப்படுத்தினார்

அடுத்தடுத்து அரைசதம்
தீபக் ஹூடா மற்றும் ஆயுஷ் படோனி அடுத்தடுத்து அரைசதம் அடிக்க இறுதியில் குர்னல் பாண்டியா 3 பவுண்டரிகள் விளாசி 21 ரன்கள் குவிக்க, குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. குஜராத் பந்துவீச்சில் முகமது சமி 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். சென்னை அணியின் பேட்டிங்கை போல் லக்னோ அணி பேட்டிங் இருந்தாலும், நடுவரிசையில் இளம் விரர்கள் லக்னோ அணியை காப்பாற்றினர்.

அதிர்ச்சி தொடக்கம்
இதனையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியிலும் சுப்மான் கில் டக் அவுட்டாகியும், விஜய் சங்கர் 4 ரன்களிலும் சமீரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். 15 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் குஜராத் அணி தடுமாறிய போது களத்துக்கு வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதிரடி வெற்றி
இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொள்ள களத்துக்கு வந்த டேவிட் மில்லர் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை நெருக்கடியில் இருந்து மீட்டார். யாரும் எதிர்பார்க்காத வகையில் ராகுல் தேவதியா எரிமலை போல் வெடிக்க தொடஙஙகினர். 24 பந்துகளில் 40 ரன்கள் எடுக்க, அபினல் சதரங்கானி 7 பந்துகளில் 15 ரன்கள் விளாச, குஜராத் அணி 19.4வது ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.


Click it and Unblock the Notifications