ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருடன் டெக்கான் சார்ஜர்ஸ் இன்று மோதல்

நடப்பு ஐபிஎல் தொடர் டெக்கான் சார்ஜர்ஸுக்கு சரியானதாக அமையவில்லை. அடுத்தடுத்து 2 தோல்விகளை அது சந்தித்துள்ளது. டெக்கான் அணியின் பந்து வீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கும் கூட சிரமமாகத்தான் உள்ளது. டேல் ஸ்டெயின் 2 போட்டிகளில் 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.அமித் மிஸ்ரா ஒரு விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் பிரக்யான் ஓஜா பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளார். ஒரு ஓவருக்கு பத்து ரன்களை வாரிக்கொடுத்துள்ள அவர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. பேட்டிங்கிலும் கூட டெக்கான் இன்னும் சார்ஜ் ஏறாமல்தான் உள்ளது.
பெங்களூர் அணிக்கும் பந்து வீச்சுதான் சிக்கலாக உள்ளது. ஜாகிர்கான் இதுவரை தனது விஸ்வரூபத்தை காட்டவில்லை. 2 போட்டிகளில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். அவரது பந்து வீச்சு சராசரியும் 8 என்று பயங்கரமாக உள்ளது.
உலகக்கோப்பைப் போட்டிகளில் மிகச் சிறப்பாக பந்துவீசி அதிக விக்கெட்களை வீழ்த்திய ஜாகிர்கானை நம்பி பெங்களூர் அடுத்தடுத்த போட்டிகளை சந்திக்கவுள்ளது. அதேபோல அபிமன்யூ மிதுனும் சிறப்பாக பந்து வீசாமல் உள்ளார். டிர்க் நான்ஸ் மற்றும் கேப்டன் டேணியல் வெட்டோரி ஆகியோர் மட்டுமே சற்று ஆறுதலாக ஆடி வருகின்றனர்.
இன்றைய போட்டியில், ஸ்டெயின் சிறப்பாக பந்து வீசினால், மற்றவர்களும் சிறப்பாக ஆடினால் மட்டுமே டெக்கான் அணியால் வெற்றியைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும். அதேசமயம், பெங்களூர் அணியில் ஜாகிர்கான் விஸ்வரூபம் எடுத்து விட்டால் அந்த அணிக்கு சிறப்பான வாய்ப்பாக அது அமையலாம் என்பதால் இன்றைய போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல்4 மேலும் செய்திகள்
Story first published: Thursday, June 7, 2012, 11:11 [IST]
Other articles published on Jun 7, 2012


Click it and Unblock the Notifications