
இரட்டை சதம்
இருவரும் அடுத்தடுத்து சதம் விளாசினர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 371 ரன்கள் சேர்த்தனர். அபிமன்யூ ஈஸ்வரன் 154 ரன்கள் சேர்க்க, ஜெயஷ்வால் இரட்டை சதம் விளாசி அசத்தினார். தமிழக வீரர் பாபா அப்ரஜித் 19 ரன்களும், அண்டர் 19 கேப்டன் யாஷ் தூல் 55 ரன்களும் எடுக்க முதல் இன்னிங்சில் இதர இந்திய அணி 484 ரன்கள் குவித்தது.

294 ரன்களுக்கு அவுட்
மத்திய பிரதச அணியில் ஆவேஷ் கான் மட்டும் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து தங்களது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த மத்திய பிரதேச அணியில் யாஷ் துபே சதமும், சர்னாஷ், ஹர்ஸ் ஆகியோர் அரைசதமும் எடுக்க மத்திய பிரதேச அணி 294 ரன்கள் எடுத்தது.

மீண்டும் சதம்
190 ரன்கள் முன்னிலை பெற்ற இதர இந்திய அணி மீண்டும் இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது. இதில் மாயங் அகர்வால் டக் அவுட்டாக, அபிமன்யூ ஈஸ்வரன் 28 ரன்கள் சேர்த்தார். யாஷ் துல், பாபா இந்தரஜித், சௌரப் குமார் ஆகியோர் டக் அவுட்டாக, தனி ஆளாக நின்ற ஜெய்ஷ்வால் சதம் அடித்தார்.இதன் மூலம் 2வது இன்னிங்சில் இதர இந்திய அணி 246 ரன்கள் எடுத்தது.

சாம்பியன் பட்டம்
437 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மத்திய பிரதேச அணி ஆட்டத்தை டிரா செய்ய போராடியது. ஆனால் அந்த அணி 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 238 ரன்கள் வித்தியாசத்தில் இதர இந்திய அணி வென்றது. முதல் இன்னிங்சில் இரட்டை சதமும், இரண்டாவது இன்னிங்சில் சதமும் அடித்த ஜெய்ஷ்வால் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார். இவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











