Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs BAN: இஷான் கிஷனுக்கு பிசிசிஐ வைத்த ஆப்பு.. டி20 அணியில் இடம் இல்லை.. ஆனா ஒரு ட்விஸ்ட் இருக்கு

மும்பை: கடந்த ஆண்டு இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட இஷான் கிஷன் பிசிசிஐ ஒப்பந்தத்தையும் இழந்து இருந்தார். அவர் உள்ளூர் போட்டிகளில் ஆடாததால் பிசிசிஐ அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கவில்லை. தற்போது அவர் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் ஆடி வருகிறார். ஆனாலும், இதுவரை அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அவர் இரானி கோப்பை உள்ளூர் டெஸ்ட் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அந்த போட்டி அக்டோபர் 1 முதல் 5 வரை நடைபெற உள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி முதல் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடர் துவங்க உள்ளது.

irani cup ishan kishan sanju samson

இந்த நிலையில், இஷான் கிஷனுக்கு டி20 அணியில் இடம் அளிக்கப்படாது என கூறப்படுகிறது. அதனாலேயே அவரை இரானி கோப்பைக்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. அதே சமயம், சஞ்சு சாம்சனுக்கும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அர்ஷ்தீப் சிங்கிற்கும் அந்த அணியில் இடம் அளிக்கப்படவில்லை.

அவர்கள் இருவரும் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோத உள்ள டி20 தொடரில் பங்கேற்க உள்ளனர் என்பதாலேயே அவர்களுக்கு இரானி கோப்பைக்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் இடம் அளிக்கப்படவில்லை என பிசிசிஐ அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். அதே சமயம், இஷான் கிஷன் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டதன் மூலம் பிசிசிஐ அவரை ஒட்டுமொத்தமாக கைவிடவில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

அவர் படிப்படியாக இந்திய அணியை நோக்கி முன்னேறி வருகிறார். இந்திய அணி அடுத்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இந்த நிலையில், அவர் அந்தத் தொடர்களின் போது எந்த வீரருக்காவது காயம் ஏற்பட்டால் இந்திய அணியில் தேர்வாக வாய்ப்பு உள்ளது.

2024 இரானி கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ள ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி :

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), மானவ் சுதர், சரண்ஷ் ஜெயின், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார், யாஷ் தயாள், ரிக்கி புய், ஷஸ்வத் ராவத், கலீல் அகமது, ராகுல் சாஹர்

Story first published: Wednesday, September 25, 2024, 6:30 [IST]
Other articles published on Sep 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+