For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இராணி கோப்பை 2025..ருதுராஜ், ரஜத் பட்டிதார் முகத்தில் கரியை பூசிய விதர்பா..இதர இந்திய அணிக்கு கேவலம்

நாக்பூர்: இராணி கோப்பை 2025 ஆம் ஆண்டு சீசன் சாம்பியன் பட்டத்தை விதர்பா அணி கைப்பற்றி அசத்தியிருக்கிறது. நாக்பூரில் நடைபெற்ற இதர இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 93 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா வென்றுள்ளது.

ரஞ்சி கோப்பையை வென்ற அணிக்கும் மற்ற அணியை சேர்ந்த டாப் வீரர்களும் இணைந்து விளையாடும் போட்டி தான் ஐந்து நாட்கள் நடைபெறும் இராணி கோப்பை ஆகும். இந்த டெஸ்ட் போட்டியில் அக்ஷய் வட்கார் தலைமையிலான விதர்பா அணியில் துருவ் சோரே அதர்வா டைடே, யாஷ் தாக்கூர், டேனிஷ் மலேவர் போன்ற இளம் வீரர்கள் விளையாடினர்.

Irani Cup 2025

இதைப் போன்று ரஜத் பட்டிதார் தலைமையிலான இதர இந்திய அணியில் அபிமன்யு ஈஸ்வரன் யாஷ் தூல்,ருதுராஜ் கெய்க்வாட், இசான் கிஷன், ஆகாஷ் தீப்,அன்சூல் காம்போஜ் போன்ற ஸ்டார் வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரர் அதர்வா டைடே, அபாரமாக விளையாடி 143 ரன்கள் எடுக்க நடுவரிசையில் யாஷ் ரத்தோட் 91 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிய அளவு சோபிக்காத நிலையில் விதர்பா அணி 342 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை அடுத்து இதர இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர் அபிமனியூ ஈஸ்வரர் 52 ரன்களும் கேப்டன் ரஜத் பட்டிதார் 66 ரன்களும் எடுக்க, ருதுராஜ் 9 ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் முதல் இன்னிங்சில் இதர இந்திய அணி 216 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. யாஷ் தாக்கூர் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

128 ரன்கள் முன்னிலை பெற்று இருந்த நிலையில் விதர்பா அணி இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கியது. இதில் பல வீரர்கள் நல்ல தொடக்கத்தை பெற்றாலும், அரைசதம் கூட எடுக்காமல் ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி இரண்டாவது இன்னிங்சில் 232 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது சிஎஸ்கே வீரர் அன்சூல் காம்போஜ் இதர இந்திய அணிக்காக நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் 361 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இதர இந்திய அணி விளையாடியது.

தொடக்க வீரர் அபிமன்யூ ஈஸ்வரன் 17 ரன்களின் ஆட்டம் இழக்க இசான் கிஷன் 35 ரன்கள், கேப்டன் ரஜத் பட்டிதார் 10 ரன்களிலும் ஆட்டம் இழந்தார்.முதலில் தடுமாறிய ருதுராஜ் கெய்க்வாட் இரண்டாவது இன்னிங்சில் வெறும் ஏழு ரன்களில் வெளியேறினார். அதிகபட்சமாக 92 ரன்கள் அடிக்க மனவ் சுதர் 56 ரன்கள் எடுத்தார்.இதனால் இதர இந்திய அணி 267 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 93 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா அணி வெற்றி பெற்றது.

Story first published: Sunday, October 5, 2025, 15:35 [IST]
Other articles published on Oct 5, 2025
English summary
Irani Cup 2025- Vidarbha beat Rest of India by 93 runs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+