Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடரும் வாய்ப்பு மறுப்பு.. வேறு நாட்டுக்கு விளையாடும் சஞ்சு சாம்சன்? அயர்லாந்து அணி பேச்சுவார்த்தை

திருவனந்தபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் திறமை வாய்ந்த வீரராக அறியப்படுபவர் சஞ்சு சாம்சன். அண்டர் 19 கிரிக்கெட் காலத்தில் இருந்த ரசிகர்களிடையே பெயர் பெற்றவர்.

இந்திய அணிக்காக 2015ஆம் ஆண்டிலேயே அறிமுகமான சஞ்சு சாம்சன், இந்த 7 ஆண்டுகளில் வெறும் 16 டி20 போட்டி, 11 ஒருநாள் போட்டியில் தான் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார்.

அந்த அளவிற்கு சஞ்சு சாம்சனுக்கு, இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு வழங்காமல் , பிசிசிஐ ஏமாற்றி இருக்கிறது.

வெளிநாட்டு வாய்ப்பு

வெளிநாட்டு வாய்ப்பு

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காத பல வீரர்கள் வெளிநாட்டிற்கு விளையாட செல்ல தொடங்கி விட்டனர். அண்டர் 19 உலககோப்பையை வென்ற உன்முகுத் சந்த், போதிய வாய்ப்பு இல்லாத காரணத்தால் அமெரிக்காவிற்காக விளையாட சென்றுவிட்டார். இதே போன்று உத்தப்பா போன்ற சீனியர் வீரர்களும், இந்திய கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டு வெளிநாட்டில் விளையாட சென்றுவிட்டார்கள்.

அயர்லாந்து அணி

அயர்லாந்து அணி

இந்த நிலையில், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காததால், அவரை இந்திய கிரிக்கெட்டிலிருந்து விலகுமாறு அண்மையில் ரசிகர்களே கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், அயர்லாந்து கிரிக்கெட் வாரியம், சஞ்சு சாம்சனை தங்கள் நாட்டிற்காக விளையாட கோரி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது.

சூப்பர் ஆஃபர்கள்

சூப்பர் ஆஃபர்கள்

அயர்லாந்து நாட்டு குடியுரிமை, கார் மற்றும் வீட்டு வசதி, இந்திய கிரிக்கெட்டிற்கு நிகராக வழங்கப்படும் ஊதியம் என அனைத்தையும் வழங்குகிறோம். எங்கள் நாட்டிற்கு வந்து அயர்லாந்து அணிக்காக விளையாடுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளது. அயர்லாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்றால், முதலில் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும்.

நிராகரித்த சஞ்சு சாம்சன்

நிராகரித்த சஞ்சு சாம்சன்

ஆனால், சஞ்சு சாம்சன் நாட்டின் மீது உள்ள பற்றால், இந்த வாய்ப்ப வேண்டாம் என்று நிராகரித்துள்ளார். வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டில் தான் கடைசி வரை இருப்பேன். பிசிசிஐ அனுமதி அளித்தால் வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாடுவேன் என்று பதில் அளித்துள்ளார். சஞ்சு சாம்சனின் இந்த முடிவு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

Story first published: Sunday, December 11, 2022, 13:46 [IST]
Other articles published on Dec 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+