அயர்லாந்திடம் வீழ்ந்த இங்கிலாந்து.. கத்துக்குட்டி அணியிடம் மிக பரிதாபமாக தோல்வி..ரசிகர்கள் அதிர்ச்சி
மெல்பேர்ன்: டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை அயர்லாந்து அணி வீழ்த்தி ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்துள்ளது.
குரூப் ஏ பிரிவில் இரு அணிகளும் மோதிய இந்த போட்டி மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அயர்லாந்து இன்னிங்ஸ்
இதனையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி பேட்ஸ்மேன்கள், இங்கிலாந்தின் பந்துவீச்சை அசால்ட்டாக சமாளித்தனர். தொடக்க வீரர் பால் ஸ்டிர்லிங் 8 பந்துகளில் 14 ரன்களை அடித்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான பால்பிர்னி 47 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 62 ரன்களை விளாசி இங்கிலாந்து அணியை அதிர வைத்தார்.

சவாலான இலக்கு
பால்பிர்னியுடன் கைகோர்த்து விளையாடிய டக்கர் 27 பந்துகளில் 34 ரன்களை விளாசினார். இதனால் அயர்லாந்து அணியின் ஸ்கோர் மலமலவென உயர்ந்தது. ஆனால் டாப் ஆர்டரை போல மிடில் ஆர்டரால் சமாளிக்க முடியவில்லை. அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு வெளியேற அயர்லாந்து அணி 19.2 ஓவர்களில் 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இங்கி,க்கு அதிர்ச்சி
சுலபமான இலக்கு என களமிறங்கிய இங்கிலாந்துக்கு தொடக்கமே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் ஜாஸ் பட்லர் டக் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு ஓப்பனர் அலெக்ஸ் ஹேல்ஸ் 7 ரன்களுக்கு வெளியேறினார். இதுஒருபுறம் இருக்க, ஆட்டத்தின் போது தீடீரென மழைக்குறுக்கிட்டதால் டி.ஆர்.எஸ் விதிப்படி இங்கிலாந்து 14.3 ஓவர்களில் 111 ரன்களை எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து தோல்வி
ரன் தேவை அவசரமானவுடன், இங்கிலாந்தின் பேட்டிங் ஆர்டரும் சரிந்தது. முன்னணி வீரர்களான பென் ஸ்டோக்ஸ் (6), ஹாரி பூர்க் (18), டேவிட் மாலன் (35) என அவுட்டாகி ஏமாற்றினர். இதன்பின்னர் வந்த ஹாரி பூர்க், மொயீன் அலி ஆகியோர் போராடிய போதும் அந்த அணியால் 14.3 ஓவர்களில் 105/5 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து வெற்றி கண்டது.

ரசிகர்கள் ஆச்சரியம்
டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கே வாய்ப்புள்ளதாக கருதப்படும் இங்கிலாந்து போன்ற பெரிய அணி, தகுதிச்சுற்று மூலம் உள்ளே வந்த கத்துக்குட்டி அணியான நெதர்லாந்து அணியிடம் தோல்வியடைந்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications