Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்க வேண்டாம்.. இர்பான் பதான் கொடுத்த எச்சரிக்கை.. காரணம் சரி தானோ?

மெல்போர்ன் : டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரை இறுதியில் தோல்வியை தழுவிய நிலையில், தற்போது வரும் 18ஆம் தேதி தொடங்க உள்ள டி20 தொடருக்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

இந்த தொடரில் சீனியர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் அடுத்த டி20 உலக கோப்பைக்கு இந்திய அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் நியமிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முடிவுகள் மாறாது

முடிவுகள் மாறாது

இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இர்பான் பத்தான் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தால் சில அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நீங்கள் கேப்டனை மாற்றினால் உங்களுக்கு முடிவுகள் மாறும் என்று நான் சொல்ல வரவில்லை.

காயம்

காயம்

நீங்கள் கேப்டனை மாற்ற முடிவை எடுத்தால் நீங்கள் எதிர்பார்க்கும் முடிவுகள் உங்களுக்கு கிடைக்காது. ஹர்திக் பாண்டியாவை பொருத்தவரை நீங்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். அவர் வேக பந்துவீச்சாளர் மற்றும் பேட்டிங் செய்யக் கூடியவர். ஹர்திக் பாண்டியாவுக்கு அடிக்கடி காயங்கள் ஏற்படுவது உண்டு.

என்ன செய்வீர்கள்?

என்ன செய்வீர்கள்?

ஹர்திக் பாண்டியாவை நீங்கள் கேப்டனாக நியமித்து உலக கோப்பைக்கு முன் அவர் காயத்தால் தொடரிலிருந்து விலகினார். நீங்கள் என்ன செய்வீர்கள் உங்கள் அணியில் வேறு யாரும் கேப்டனாக இல்லை என்றால் அந்தத் தொடர் பாழாகிவிடும். என்னைப் பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா நல்ல தலைவனாக செயல்பட்டு இருக்கிறார். ஐபிஎல் தொடரில் குஜராத் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

கூடுதல் கேப்டன்

கூடுதல் கேப்டன்

ஆனால் நீங்கள் கேப்டனாக ஒருவரை அல்ல இரண்டு நபரை தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டால் கூட இன்னொரு நபர் அந்த பொறுப்பை பார்த்துக் கொள்வார். நாம் தொடக்க வீரர்கள் விஷயத்தில் அணியில் கூடுதலாக சில வீரர்களை தேர்வு செய்வோம். அதேபோல் தான் கேப்டன் பொறுப்புக்கும் வீரர்களை தயார் செய்ய வேண்டும் என்று இர்பான் பதான் கூறினார்.

Story first published: Monday, November 14, 2022, 21:03 [IST]
Other articles published on Nov 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+