Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவின் சிறந்த ஆல் ரவுண்டராக ஆகி இருப்பேன்.. 27 வயதிலேயே டீமை விட்டு தூக்கி எறியப்பட்ட வீரர்!

மும்பை : இந்திய அணியின் ஜாகிர் கானுக்கு பின் சிறந்த வேகப் பந்துவீச்சாளராக நம்பிக்கை அளித்தவர் இர்பான் பதான்.

அவர் பேட்டிங்கிலும் அதிரடி ஆட்டம் ஆடும் திறன் பெற்றவர். சிறந்த ஆல் - ரவுண்டராக வருவார் என அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், அவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் போனது. அது இன்று வரை விவாதத்திற்கு உரிய விஷயமாகவே உள்ளது.

இர்பான் பதான் பேச்சு

இர்பான் பதான் பேச்சு

அவரது கடைசி சர்வதேச போட்டியை 27 வயதில் ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கடைசி போட்டியில் கூட அவர் 5 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். இந்த நிலையில், தனக்கு ஏன் அணியில் இடம் மறுக்கப்பட்டது என்பது பற்றி பேசி உள்ளார் இர்பான் பதான்.

இந்திய அணியில் பதான்

இந்திய அணியில் பதான்

இர்பான் பதான் 19 வயதில் இந்திய அணியில் இடம் பெற்றார். அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் ஒரே போட்டியில் 9 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தி இருந்தார். அவரது ஸ்விங் பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்திய அணியில் தொடர்ந்து ஆடி வந்தார்.

100 விக்கெட்கள் சாதனை

100 விக்கெட்கள் சாதனை

59 ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்தி, இந்திய அளவில் அதிவேகமாக ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை செய்து இருந்தார். அதுவரை பந்துவீச்சை துவக்கி வந்த இர்பான் பதான் அதன் பின் மத்திய ஓவர்களில் பந்து வீச வைக்கப்பட்டார்.

ஸ்விங் ஆகாது

ஸ்விங் ஆகாது

புதிய பந்தில் எளிதாக ஸ்விங் செய்ய முடியும். ஆனால், பழைய பந்தில் பந்து அதிகம் ஸ்விங் ஆகாது. விக்கெட்டும் அதிகம் கிடைக்காது. அதனாலேயே அவர் அடுத்த 73 விக்கெட்களை வீழ்த்த 61 போட்டிகளை எடுத்துக் கொண்டார்.

கடைசி போட்டி

கடைசி போட்டி

இது பற்றி பேசிய அவர் தன்னால் இந்தியாவின் மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராக ஆகி இருக்க முடியும். ஆனால், அது நடக்கவில்லை. நான் அதிக கிரிக்கெட் ஆடவில்லை எனது கடைசி போட்டியை 27 வயதிலேயே ஆடி விட்டேன் என்றார்.

வேறு மாதிரி இருந்திருக்கும்

வேறு மாதிரி இருந்திருக்கும்

மேலும், நான் 35 வயது வரை ஆடி இருந்தால் எல்லாம் வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால், எல்லாம் நடந்து முடிந்து விட்டது. நான் அணியில் மேட்ச் வின்னராக ஆடினேன். நான் ஒரு விக்கெட் எடுத்தாலும், போட்டியின் முதல் விக்கெட் எடுத்தாலும், அது அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

எல்லாமே மாறி விடுகிறது

எல்லாமே மாறி விடுகிறது

மேலும், என் முதல் 59 போட்டிகளில் புதிய பந்தில் தான் பந்து வீசினேன். ஆனால், அதன் பின் புதிய பந்திலும், பழைய பந்திலும் வீச வாய்ப்பு கிடைக்கும் போது நம் குறி, மனநிலை, உடல்மொழி எல்லாமே மாறி விடுகிறது. விக்கெட் எடுக்க வேண்டும் என்பதில் இருந்து ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதாக மாறி விடுகிறது என்றார்.

யாராவது பேசுவார்கள்

யாராவது பேசுவார்கள்

இந்த மாற்றம் பற்றி அணியில் இருந்து யாராவது பேசுவார்கள் என தான் எண்ணியதாகவும், ஆனால், அப்படி நடக்கவில்லை என்றும் கூறினார் இர்பான் பதான். தன் கடைசி டெஸ்டை 2012இல் இலங்கை அணிக்கு எதிராக ஆடி இருந்தார் இர்பான் பதான்.

இரண்டுமே முடியும்

இரண்டுமே முடியும்

அந்தப் போட்டியில் 5 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். ஆனால், அதன் பின்பும் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தன்னால் புதிய பந்தில் மட்டுமே வீச முடியும் என கூறவில்லை. தன்னால் பழைய பந்திலும் வீச முடியும் என்றார் பதான்.

Story first published: Sunday, June 21, 2020, 17:20 [IST]
Other articles published on Jun 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+