Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் இன்னும் 7 வருஷம்.. நடராஜனுக்கு முக்கிய அட்வைஸ் தந்த இர்பான் பதான்!

மும்பை : ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்தியா கண்டறிந்த ஒரு புதிய இடது கை வேகப் பந்துவீச்சாளர் நடராஜன்.

ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகம் ஆன ஒரே இந்திய வீரரும் அவர் தான்.

இந்த நிலையில், அவரது எதிர்காலம் குறித்து அவர் எப்படி திட்டமிட வேண்டும் என முன்னாள் வீரர் இர்பான் பதான் அறிவுரை கூறி உள்ளார்.

இடது கை வேகப் பந்துவீச்சாளர்

இடது கை வேகப் பந்துவீச்சாளர்

ஜாகிர் கானுக்கு பின் இந்திய அணியில் இடது கை வேகப் பந்துவீச்சாளராக சிறப்பாக ஆடியவர் இர்பான் பதான். அவருக்கு பின் இடது கை வேகப் பந்துவீச்சாளர்கள் அதிக அளவில் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. யாரும் தங்கள் முத்திரையை பதிக்கவும் இல்லை.

கேள்விகள்

கேள்விகள்

இந்த நிலையில் நடராஜனின் வரவு இந்திய அணிக்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இடது கை வேகப் பந்துவீச்சாளர் மூலம் குறிப்பிட்ட சில பேட்ஸ்மேன்களை அச்சுறுத்த முடியும். அவர் இந்திய அணியில் இனி என்ன செய்யப் போகிறார்? எப்படி தன் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை வடிவமைத்துக் கொள்ளப் போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

இர்பான் பதான் கூறுகையில், "நடராஜன் டெஸ்ட் போட்டிகளில் நிறைய செய்ய வேண்டும். அவரது ஆங்கிள், ரிதம் ஆகியவற்றை அவர் சரி செய்ய வேண்டும். அவரிடம் தொடர்ந்து ஒரே மாதிரி பந்து வீசும் திறன் உள்ளது. அவர் தன் உடலை பந்துக்கு பின் கொண்டு செல்ல வேண்டும், அப்போது தான் பந்தை பேட்ஸ்மேனுக்கு மிக அருகே கொண்டு செல்ல முடியும்" என்றார்.

முதன்மை திட்டம்

முதன்மை திட்டம்

மேலும், "அவரது முதன்மை திட்டம் நாட்டுக்காக ஐந்து முதல் ஏழு வருடங்கள் வரை ஆட வேண்டும் என்பதாக இருக்க வேண்டும். அதற்காக அவர் தன் உடற்தகுதி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர் தன்னிடம் உள்ள திறமைகளை கொண்டே இதை செய்யலாம். போட்டிகளில் ஆட ஆட அவர் இன்னும் நிறைய கற்றுக் கொள்வார்" என்றார் பதான்.

Story first published: Friday, January 29, 2021, 18:16 [IST]
Other articles published on Jan 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+