Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!

மும்பை: ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி சமாளிப்பது என்பது குறித்து முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் ஐடியா கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ள 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் இன்னும் 5 நாட்களில் ( பிப்ரவரி 9) தொடங்கவுள்ளது. இதுதான் கடைசி பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடராகும்.

இதற்காக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பெங்களூருவிலும், இந்திய அணி வீரர்கள் நாக்பூரிலும் முகாமிட்டு தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு பயிற்சி போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை.

இந்தியாவின் கட்டாயம்

இந்தியாவின் கட்டாயம்

இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனென்றால் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும். கடந்த முறையே இறுதி சுற்று வரை சென்று தோல்வியடைந்திருந்ததால் இந்த முறை எப்படியாவது கோப்பையை வென்று தர வேண்டும் என ரோகித் முனைப்புடன் உள்ளார்.

 அச்சுறுத்தும் வீரர்

அச்சுறுத்தும் வீரர்

இந்திய அணியை பொறுத்தவரையில் தலைவலிக் கொடுக்கக்கூடிய ஒரே ஒரு பேட்ஸ்மேனாக ஸ்டீவ் ஸ்மித் தான் இருப்பார். ஏனென்றால் இந்தியாவுக்கு எதிராக விளையாட அவர் மிகவும் விரும்புகிறார். இதுவரை இந்தியாவுக்கு எதிராக 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மித் 1742 ரன்களை குவித்துள்ளார். சராசரியாக ஒரு போட்டியில் 72.58 ரன்களை அடிக்கிறார். இதில் 8 சதங்களும், ஒரு அரைசதமும் அடங்கும். அவரின் சமீபத்திய ஃபார்மும் அட்டகாசமாக இருப்பதால் ஸ்மித்தை கட்டுப்படுத்தியே தீர வேண்டும்.

இர்ஃபான் யோசனை

இர்ஃபான் யோசனை

இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித்தை அவுட்டாக்க வேண்டும் என்றால், அது ஒரே ஒருவரால் தான் முடியும் என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கூறியுள்ளார். அதில், ஸ்டீவ் ஸ்மித் ஒரு ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆகும். அந்த அணியின் டாப் ஸ்கோரர்களை பார்த்தால் அதில் நிச்சயம் ஸ்மித் இருப்பார். குறிப்பாக இந்திய பவுலர்களை சோதித்து பார்த்தவர் அவர் தான்.

ஸ்மித்தின் பலம்

ஸ்மித்தின் பலம்

ஸ்டீவ் ஸ்மித்தின் பலமே தனது மணிக்கட்டின் பலத்தை பயன்படுத்தி ஆடுவது தான். அதனை பயன்படுத்தி லெக்சைட் மற்றும் ஆஃப் சைட்களில் நன்கு வளைத்து விளையாடும் அவர், தற்போது நேர்திசையிலும் ஆட முயன்று வருகிறார். எனவே அவரை வீழ்த்த சரியான திட்டம் வேண்டும். அவர் கொடுக்கும் சவாலை ஏற்றுக்கொண்டு, வீழ்த்த வேண்டும் என்றால் அது அக்‌ஷர் பட்டேலால் மட்டுமே முடியும்.

ஒரே ஒரு பவுலர்

ஒரே ஒரு பவுலர்

ஸ்மித்திற்கு எதிராக சிறந்த நம்பர்களை வைத்துள்ளது அக்‌ஷர் பட்டேல் தான். அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாடினால் மட்டுமே ஸ்மித்திற்கு அச்சுறுத்தல் கொடுக்க முடியும். அக்‌ஷர் வீசும், லைன் மற்றும் லெந்த், குறிப்பாக ஸ்ட்ரைட் பந்துகள் நிச்சயம் ஸ்மித்தை எல்பிடபள்யூ ஆக்கும். ஒருவேளை அந்த பந்து மிஸ்ஸானால் ஸ்டம்ப் அவுட் ஆக்கிவிடும்.

எப்படி தெரியுமா?

எப்படி தெரியுமா?

ஸ்மித் நிறைய ஷாட்களை மணிக்கட்டை பயன்படுத்திதான் விளையாடுவதால் ஸ்டம்புகளுக்கு நேராக நிறைய பந்துகளை வீச வேண்டும். அப்படி வீசுவதால் ஸ்மித் இடைவெளி விட்டு அடிப்பதற்கு முடியாமல் தடுமாறுவார். அப்போது நிச்சயம் எல்.பி.டபள்யூ அல்லது ஸ்டம்ப் அவுட் ஆவார் என இர்ஃபான் பதான் யோசனைக் கூறியுள்ளார்.

Story first published: Saturday, February 4, 2023, 14:36 [IST]
Other articles published on Feb 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+