For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி, ரோகித் இல்லை.. 2023 ஆம் ஆண்டு பெஸ்ட்டாக அமைந்தது இந்த கிரிக்கெட் வீரருக்கு தான்-இர்பான் பதான்

மும்பை : 2023 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு நல்ல ஆண்டாகவே அமைந்திருக்கிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் இறுதிப்போட்டி வரை சென்று இருந்தது.

அந்த இறுதிப் போட்டியில் மட்டும் வென்று இருந்தால் இந்திய கிரிக்கெட்டில் தங்கத்தால் பொறிக்கப்பட வேண்டிய ஆண்டாக 2023 ஆம் ஆண்டு இருந்திருக்கும்.
ஆனால் ஒரே ஒரு தோல்வியால் ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Irfan Pathan hails this cricketer for humongous achievement in 2023

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.குறிப்பாக விராட் கோலி, சச்சினின் சாதனை சதத்தை ஒரு நாள் கிரிக்கெட்டில் முறியடித்து புதிய சாதனையை படைத்தார். ரோகித் சர்மாவும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் என கலக்கினார் சுப்மன் கில் ஏழு சதங்களை அடித்திருந்தார். இப்படி பல கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், இர்பான் பத்தான் கே எல் ராகுலை தான் பாராட்டிருக்கிறார்.

ஏனென்றால் கே எல் ராகுல் திறமை வாய்ந்த இந்திய வீரராக கருதப்பட்டாலும் அவர் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷியில் தடுமாறினார்.இதன் மூலம் கேப்டன் பதவியும் அவரிடம் இருந்து பறிபோனது. இதேபோன்று ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக களம் இறங்கிய கேஎல் ராகுலுக்கு பாதியில் காயம் ஏற்பட்டு தொடரிலிருந்து வெளியேறினார்.

இதனை அடுத்து உலகக் கோப்பை தொடருக்கு முன்பு அணிக்கு திரும்பிய கேஎல் ராகுல் கேப்டனாக ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தினார். இதேபோன்று ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கேஎல் ராகுல் 10 இன்னிங்ஸில் விளையாடி 452 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 111 ரன்கள் ஆகும்.

உலகக்கோப்பை தொடரில் சராசரியாக 57 ரன்கள் என்ற அளவில் ராகுல் அடித்திருந்தார். மேலும் விக்கெட் கீப்பிங்கிளும் கே எல் ராகுல் ஜொலித்தார். ரிஷப் பண்ட் இல்லாத குறையை அவர் நீக்கினார். இதற்கு எல்லாம் முத்தாப்பாய் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவர்களது சொந்த மண்ணில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தந்தார்.

இதன் மூலம் விராட் கோலிக்கு பிறகு தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு நாள் தொடரை வென்ற இரண்டாவது கேப்டன் என்ற சாதனையும் ராகுல் படைத்தார். கே எல் ராகுல் மொத்தமாக 2023 ஆம் ஆண்டு மொத்தம் 24 ஒரு நாள் போட்டியில் விளையாடியிருக்கிறார். இதில் 160 ரன்கள் மொத்தமாக அவர் அடித்திருக்கிறார். இதில் ஏழு அரை சதமும் இரண்டு சதமும் அடங்கும்.

Story first published: Friday, December 22, 2023, 20:08 [IST]
Other articles published on Dec 22, 2023
English summary
Irfan Pathan hails this cricketer for humongous achievement in 2023 கோலி, ரோகித் இல்லை.. 2023 ஆம் ஆண்டு பெஸ்ட்டாக அமைந்தது இந்த கிரிக்கெட் வீரருக்கு தான்-இர்பான் பதான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+