Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நானும், இர்பான் பதானும் புருஷன், பொண்டாட்டி மாதிரி: கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா

பெங்களூர்: நானும் இர்பான் பதானும் கணவன், மனைவி போன்று நெருக்கமானவர்கள் என்று கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் ராபின் உத்தப்பாவும், இர்பான் பதானும் மிகவும் நெருக்கமான நண்பர்கள் ஆவர். இந்நிலையில் உத்தப்பா டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,

திருமணம்

திருமணம்

எனக்கு திருமணம் ஆகப் போகிறது என்று நான் இர்பானிடம் கூறினேன். அதற்கு அவர் நானும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளேன் என்றார். என் திருமணத்தன்று மாப்பிள்ளை தோழனாக நீ தான் இருக்க வேண்டும் என நான் இர்பானிடம் தெரிவித்தேன்.

தள்ளிப்போடு

தள்ளிப்போடு

நீ என் திருமண நாள் அன்று என் அருகிலேயே இருக்க வேண்டும். அதனால் ஒரே தேதியில் நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என இர்பானிடம் கேட்டுக் கொண்டேன். உன் திருமணத்தன்று நான் மாப்பிள்ளை தோழனாக இருப்பேன் என்றேன்.

இர்பான்

இர்பான்

என் திருமண தேதி நிச்சயமானதும் அதை இர்பானிடம் தெரிவித்தேன். இதையடுத்து அவர் தனது திருமண தேதியை என் திருமணத்திற்கு முன்பு மாற்றிக் கொண்டார். அவர் எங்கள் நட்புக்காக இதை செய்தார்.

கணவன், மனைவி

கணவன், மனைவி

நானும், இர்பானும் ரொம்ப நெருக்கமாக்கும். இதனால் நாங்கள் எங்களை கணவன், மனைவியாக கருதுகிறோம். மற்றவர்களும் எங்களை அப்படி தான் அழைப்பார்கள் என்று கூறி சிரித்தார் உத்தப்பா.

Story first published: Thursday, June 9, 2016, 10:39 [IST]
Other articles published on Jun 9, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+