யார் இந்திய கிரிக்கெட் குயில்..?? இர்பான் பதான் போட்ட விடுகதை..!! இவ்வளவு திறமையா..??
மும்பை: சமூக வலைத்தளம் யாருக்கு பயன்படுகிறதோ இல்லையோ, இந்திய அணியின் முன்னாள் வீரர்களுக்கு நல்ல பொழுது போக்காக அமைந்துள்ளது
வாசிம் ஜாபருக்கு பிறகு, தற்போது டிவிட்டரில் இர்பான் பதானுக்கு தான் நல்ல மவுசு உள்ளது.
இந்த நிலையில் இர்பான் பதான் போட்ட டிவிட் ஒன்று ரசிகர்களை கடுமையாக யோசிக்க வைத்துள்ளது. அது என்ன என்பதை தற்போது காண்போம்..

இனிமையான குரல்
இர்பான் பதான் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், இளைஞரின் உருவம் நிழல் போல் தெரிகிறது. அந்த இளைஞர் இனிமையான குரலில் பாலிவுட் பாடல் ஒன்றை பாடுகிறார். இதை கேட்கும் போது மனது அப்படியே மெழுகுவர்த்தி போல் உருகுகிறது. ஆனால் அங்கு தான் இர்பான் பதான் ஒரு டிவிஸ்ட் வைத்துள்ளார்.

இர்பான் பதான் விடுகதை
அந்த இளைஞர் தொழில் முறை பாடகர் அல்ல என்றும், அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.அதுவும் சிக்சர் அடிப்பது அவருக்கு ரொம்ப பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.பாலிவுட் பாடலை பாடும் நபர் என்றால் நிச்சயம் அவர் இந்தியராக தான் இருக்கும் என்று எண்ணிய ரசிகர்கள், இது நீங்களா என்று கேட்டனர்?

காஷ்மீர் குயில்
அதற்கு இர்பான் பதான், தமக்கு அப்படி ஒரு திறமை இல்லை என்று குறிப்பிட்டார், இதனையடுத்து, சிலர் அந்த கிரிக்கெட் குயில் காஷ்மீரை சேர்ந்த அப்துல் ஷமத் என்று சரியாக கண்டுபிடித்துள்ளனர். ஆம், ஐ.பி.எல் போட்டியில் ஐதராபாத் அணிக்காக விளையாடும் அப்துல் ஷமத்க்கு இவ்வளவு திறமையா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் அவரது பாடலை கேட்டு வருகின்றனர்

பாலிவுட் வாய்ப்பு
இந்த நிலையில், அப்துல் ஷமதுக்கு கிரிக்கெட்டை தவிர நல்ல பாடக்கூடிய திறமையும் உள்ளது தெரியவந்துள்ளது. அப்துல் ஷமத் இது போல் நிறைய பாடல்களை பாடியுள்ளார். இது அனைத்தையும் தற்போது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். சிக்சர்கள் அடித்து புகழ் பெற்ற அப்துல் ஷமத், தற்போது தனது குரல் மூலம் பிரபலமாகி வருகிறார். இதனால் அவருக்கு விரைவில் பாலிவுட் வாய்ப்பு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


Click it and Unblock the Notifications