Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானை வீழ்த்துவது எப்படி.. மேப் போட்டு கொடுக்கும் இர்பான் பதான்.. சூப்பர் டிப்ஸா இருக்கே?

மும்பை : பாகிஸ்தானை வீழ்த்துவது எப்படி என்பது குறித்து இந்திய வீரர்களுக்கு இர்பான் பதான் பிளான் போட்டு கொடுத்துள்ளார்.

இந்தியா வரும் 23ஆம் தேதி பாகிஸ்தானை முதல் போட்டியில் எதிர்கொள்கிறது. கடந்த முறை அடைந்த தோல்விக்கு, இம்முறை இந்தியா பழித்தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் பும்ரா இல்லாதது மைனசாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் பாகிஸ்தான் அணி முழு பலத்துடன் களமிறங்குகிறது. பாகிஸ்தான் அணி முத்தரப்பு தொடரை வென்ற உத்வேகத்துடன் உள்ளது.\

மெல்போர்ன் மைதானம்

மெல்போர்ன் மைதானம்

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இர்பான் பதான், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடும் போது அதற்கு ஏற்றார் போல் உங்களது ஆட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். மெல்போர்ன் மைதானத்தில் நேராக இருக்கும் பவுண்டரி அவ்வளவு பெரியது கிடையாது. இருப்பினும் இடது புறம் வலது புறமும் பவுண்டரி அடிப்பது மிகவும் கடினம்.

ரிஸ்வானுக்கு பந்துவீசுவது எப்படி?

ரிஸ்வானுக்கு பந்துவீசுவது எப்படி?

இதனால் இந்தியா அறிவுபூர்வமாக பேட்டிங் ஆட வேண்டும். இரண்டு வீரர்களுக்கு இடையே உள்ள கேப்பை பார்த்து ஆட வேண்டும்.இரண்டு ரன்கள் ஓட வேண்டிய இடத்தில் மூன்று ரன்களும், ஒரு ரன் ஓட வேண்டிய இடத்தில் இரண்டு ரன்களும் ஓடி ரன் சேர்க்க வேண்டும்.இதேபோன்று ரிஸ்வானுக்கு பந்து வீசும் போது ஆப்சைடுக்கு வெளியே வீச கூடாது.

 ஸ்டம்பை குறிவையுங்கள்

ஸ்டம்பை குறிவையுங்கள்

ரிஸ்வானை நம்பி தான் பாகிஸ்தான் அணியின் பவர்பிளே இருக்கிறது. அவருக்கு பந்து வேகமாக வீச வேண்டும். பாபர் அசாம் தனது இன்னிங்சை கட்டமைக்க நேரம் எடுத்துக் கொள்வார்.அதையும் இந்திய பவுலர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஸ்டம்புக்கு நேராக பந்தை வீச வேண்டும்.

பவுலிங் டிப்ஸ்

பவுலிங் டிப்ஸ்

அதேபோன்று ரிஸ்வானுக்கு ஃபுல் லெந்தில் பந்துகளை வீசக்கூடாது. அதனை அவர் அடித்து விடுவார், பாபர் அசாம் எல் பி டபிள்யூ ஆவதற்கு நிறைய வாய்ப்பு இருப்பதால் ஆர்ஸ்தீப் சிங், புவனேஸ்வர் குமாரை இன்சுவிங் பந்துகளை வீச அறிவுறுத்த வேண்டும்.

Story first published: Friday, October 14, 2022, 21:31 [IST]
Other articles published on Oct 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+