Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எழுதி வச்சிக்கோங்க.. இனி இந்த சிஎஸ்கே வீரர் தான் நம்பர் 1 பவுலராக இருப்பார் என இர்பான் பதான் கணிப்பு

மும்பை: இந்திய அணியில் பயிற்சியாளர் பொறுப்பு கிடைத்தால் தான் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு சிறப்பாக மேற்கொள்வேன் என்று முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் பயிற்சியாளர் பொறுப்புக்கு முன்னாள் இந்திய வீரர்களே நியமிக்கப்படுகிறார்கள்.

ரவி சாஸ்திரி,ராகுல் டிராவிட், கம்பீர் ஆகியவர்களை தொடர்ந்து பிற்காலத்தில் இந்திய முன்னாள் வீரர்களை பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இர்பான் பதான் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பு கிடைத்தால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

Irfan Pathan

இது குறித்து பேசிய அவர், வளர்ச்சி என்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இதனால் நான் அமர்ந்து ஏதேனும் ஒரு விஷயம் வளர்கிறது என்றால் அதை நான் மகிழ்ச்சியுடன் கண்டுகளிப்பேன். அந்த வளர்ச்சி பயணத்தில் நானும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தரும்.

உண்மைதான் இங்கே நான் ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகின்றேன். ஜான் ரைட் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து அவர் செயல்பட்ட விதம் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் இந்திய அணிக்குள் முதலில் வந்தபோது ஜான் ரைட் பயிற்சியாளராக கடினமாக உழைத்தார்.பேட்டிங் நுணுக்கங்களை அறிந்த பல பயிற்சியாளர்களை நான் பார்த்திருக்கின்றேன்.

ஆனால் ஜான் ரைட்டின் ஸ்டைல், வேறு யாருக்கும் வராது. ஆனால் பயிற்சியாளர் பதவி என்பது வீரர்கள் பற்றியது. அனைத்தும் பின்னால் நின்று அணியை வழி நடத்துவது என்பது மகிழ்ச்சியைத் தரும். எதிர்காலத்தில் எனக்கு அந்த பதவி வந்தால் நிச்சயம் நான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்.

தற்போது வெள்ளை நிற கிரிக்கெட் பந்தில் நம்பர் ஒன் பவுலர் என்றால் அது ஆர்ஸ்தீப் சிங் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இதேபோன்று இடது கை வேகப்பந்துவீச்சாளருக்கு நல்ல திறமை வேண்டும். பந்தை 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி ஸ்விங் செய்ய வேண்டும். இந்த திறன் எல்லாம் கலீல் அகமதுக்கு இருக்கின்றது. அவர் நன்றாக முன்னேறி வருகின்றார். அது மட்டுமில்லாமல் ஸ்லோ பவுன்சரை அவர் நன்றாக வீசுகின்றார்.

அவருடைய ஷீம் பொசிஷனும் நன்றாக இருக்கின்றது. உடல் தகுதியையும் முன்னேற்றி இருக்கின்றார். அடுத்த நான்கு இந்த ஆண்டுகளில் அவர் பெரிய வீரராக வருவார் சிஎஸ்கே விடம் அவர் நன்றாக செயல்பட்டு இருக்கின்றார். சரியான நேரத்தில் சரியான இடத்தில் கலீல் அஹமத் நன்றாக செயல்பட்டால் நிச்சயம் அடுத்த ஐந்தாறு ஆண்டுகளில் பெரிய உயரத்திற்கு செல்வார் என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, August 31, 2025, 14:33 [IST]
Other articles published on Aug 31, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+