Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"வைபவ் யார் இடத்தை பிடிக்கிறானோ அவங்க காலி".. சஞ்சு சாம்சனை சூசகமாக சுட்டிக்காட்டிய பதான்

மும்பை: ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடி தொடர்நாயகன் விருதை வென்ற நிலையில், இந்திய டி20 அணியில் தனது இடத்தை இழந்துள்ள சஞ்சு சாம்சனுக்கு முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக பிளேயிங் லெவனில் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டார். கிடைத்த வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்திய வைபவ், 151 ரன்கள் குவித்து அசத்தினார். இரண்டு அரைசதம் அடித்து இருந்தார்.

Irfan Pathan takes dig at Sanju Samson after Vaibhav Suryavanshi proved himself

வைபவின் அசாத்திய ஆட்டத்தைக் கண்டு வியந்த இர்ஃபான் பதான் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், "இந்தச் சிறுவன் யாருடைய இடத்தைப் பிடிக்கிறானோ, அவரை மீண்டும் இந்திய அணிக்குள் வரவிட மாட்டான். அந்த அளவுக்கு வைபவ் சூர்யவன்ஷி ஒரு ஸ்பெஷலான வீரர்" எனப் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் சஞ்சு சாம்சன் இனி இந்திய டி20 அணிக்குத் திரும்புவது மிகவும் கடினம் என்பதை அவர் நேரடியாக எச்சரித்துள்ளார்.

சஞ்சு சாம்சன் 2026 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய போதும் அதன் பின் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. தற்போது வைபவ் சிறப்பாக ஆடி இருப்பதால் சஞ்சு சாம்சன் மீண்டும் இந்திய அணியில் தனது இடத்தை பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெறும் 15 வயதே ஆகும் வைபவ் சூர்யவன்ஷி, இந்தத் தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 50.33 பேட்டிங் சராசரி மற்றும் 196.10 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டுடன் 151 ரன்கள் குவித்தார். சீனியர் வீரர் இஷான் கிஷனை விட அதிக ரன்கள் எடுத்து தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இவரது அதிரடியால் இந்திய அணி ஜிம்பாப்வேயை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.

ஒழுங்கா ஆடாத அபிஷேக் சர்மாவுக்கு ஒரு ரூல்ஸ்.. சஞ்சு சாம்சனுக்கு வேற ரூல்ஸா? ஹனுமா விஹாரி விமர்சனம்

ஒழுங்கா ஆடாத அபிஷேக் சர்மாவுக்கு ஒரு ரூல்ஸ்.. சஞ்சு சாம்சனுக்கு வேற ரூல்ஸா? ஹனுமா விஹாரி விமர்சனம்

இந்திய அணியின் தற்காலிகப் பயிற்சியாளரான வி.வி.எஸ்.லக்ஷ்மனும் வைபவின் முதிர்ச்சியைப் பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில், "கடந்த 6 மாதங்களில் வைபவின் ஆட்டத்தில் முதிர்ச்சி மற்றும் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளும் திறன் வியக்கத்தக்க வகையில் உயர்ந்துள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைக்குப் பிறகு, ஐபிஎல் தொடரிலும் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு அவர் ஆதிக்கம் செலுத்தினார்" எனப் பெருமிதத்துடன் கூறினார்.

Story first published: Monday, July 27, 2026, 11:10 [IST]
Other articles published on Jul 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+