Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: “நோட் பன்னிக்கோங்க.. அந்த 6 பேர் கெத்து காட்டுவாங்க”.. இர்ஃபான் பதான் நம்பிக்கை!

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் அந்த 6 வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 26ம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கியுள்ளது.

டெஸ்ட் போட்டி

டெஸ்ட் போட்டி

தென்னாப்பிரிக்க களத்தில் இந்திய அணி வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயமாக இருக்காது. முதல் போட்டி நடைபெறும் செஞ்சூரியன் மைதானத்தில் தென்னாப்பிரிக்க அணி பலமான ஒன்றாகும். இதுவரை அந்த அணி அங்கு நடைபெற்ற 26 டெஸ்ட் போட்டிகளில் 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகள் டிரா, 2 தோல்விகளையும் சந்தித்துள்ளது. இந்த தோல்விகளும் 2015-க்கு முன்புதான்.

 இந்திய அணியின் நிலைமை

இந்திய அணியின் நிலைமை

ஆனால் இந்திய அணியோ இங்கு 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலுமே தோல்வியையே சந்தித்துள்ளது. இதனால் இந்த முறை எப்படியாவது சாதித்து விட வேண்டும் என இந்திய வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். முன்னாள் வீரர்களூம் எப்படி அங்கு செயல்பட வேண்டும் என அட்வைஸ் கூறி வருகின்றனர்.

இர்பான் டிப்ஸ்

இர்பான் டிப்ஸ்

இந்நிலையில் இந்த போட்டியில் எந்த வீரர்கள் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தென்னாப்பிரிக்கா களங்கள் வேகப்பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும். இங்கு இந்திய பவுலர்களும் சிறப்பாக செயல்பட முடியும். நமது வேகப்பந்து வீச்சாளர்கள் சமீப காலமாகவே வெளிநாட்டு மண்களிலும் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். தென்னாப்பிரிக்க மண்ணிலும் அதிரடியாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Recommended Video

South Africa Cricket வாரியத்துக்கு BCCI போட்ட கண்டிஷன்.. போட்டி நடக்குமா?
பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், ஜஸ்பரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்தூல் தாகூர் இவர்களில் யார் களமிறங்கினாலும், சரியான லைனில் பந்துவீசி, பேட்ஸ்மேன்களை திணறடிக்க முடியும். இதனால், இவர்களால் 20 விக்கெட்டுகளை சுலபமாக வீழ்த்த முடியும் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது என இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, December 22, 2021, 20:57 [IST]
Other articles published on Dec 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+