Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமையா?".. பக்கத்து வீட்டு பாகிஸ்தானை கலாய்த்த இர்பான் பதான்.. என்ன நடந்தது?

மும்பை: 2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் பாகிஸ்தானை சமூக வலைதளத்தில் கிண்டல் செய்துள்ளார். அவரது தற்போதைய ட்வீட் இணையத்தில் பரவி வருகிறது.

துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இந்திய வீராங்கனைகளின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 55 ரன்களுக்கு சுருண்டது. ஸ்ரீ சரணி, பிரேமா ராவத் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். தொடர்ந்து ஆடிய இந்திய அணி, 8.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து எளிதாக இலக்கை எட்டியது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 18 ரன்களுடனும், தீப்தி சர்மா 12 ரன்களுடனும் களத்தில் இருந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

Irfan Pathan Trolls Pakistan Again After Defeat to India Women in Women Asia Cup 2026

இந்திய அணியின் இந்த அபார வெற்றிக்குப் பிறகு, இர்பான் பதான் தனது எக்ஸ் பக்கத்தில், "இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமையா?" என இந்தி மொழியில் பதிவிட்டு பாகிஸ்தானை கிண்டல் செய்துள்ளார். இதற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான பின்னணி உள்ளது. கடந்த 2025 ஆண்கள் ஆசிய கோப்பை தொடரின் போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அடுத்தடுத்து மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் மோதிக்கொண்டன.

அதில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்திய போது, இர்பான் பதான் "ஞாயிற்றுக்கிழமை எப்படி இருந்தது பக்கத்து வீட்டுக்காரரே?" எனப் பதிவிட்டு நையாண்டி செய்தார். தற்போது இந்திய மகளிர் அணியின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும் அதே பாணியில் மீண்டும் பாகிஸ்தான் ரசிகர்களை கலாய்த்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மகளிர் அணி செய்த படுமோசமான சாதனை.. வரலாற்றிலேயே குறைந்த ஸ்கோர்

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மகளிர் அணி செய்த படுமோசமான சாதனை.. வரலாற்றிலேயே குறைந்த ஸ்கோர்

இந்தப் போட்டிக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், "இது எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டம். எங்கள் பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தின் தன்மையை அறிந்து திட்டமிட்டு சிறப்பாக பந்துவீசினர்" என்று பாராட்டினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி தனது குரூப் சுற்றில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடம் பிடித்துள்ளது. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டுமானால், ஹாங்காங் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

டீம் அடிச்ச 55 ரன்களுக்கு இந்த திமிர் தேவையா? பாகிஸ்தான் கேப்டன் சனாவை வெளுக்கும் ரசிகர்கள்

Also Read

டீம் அடிச்ச 55 ரன்களுக்கு இந்த திமிர் தேவையா? பாகிஸ்தான் கேப்டன் சனாவை வெளுக்கும் ரசிகர்கள்
Story first published: Sunday, September 6, 2026, 11:49 [IST]
Other articles published on Sep 6, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+