For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னங்க இது.. சின்னப் புள்ளைங்களை கூட சமாளிக்கலாம் போல.. இவங்க ஆட்டம் தாங்க முடியலை.. பதான் சேட்டை!

டெல்லி : இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சத்தால் மக்கள் வீட்டுக்குள் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கிரிக்கெட் வீரர்கள் வீட்டுக்குள் பல்வேறு "ஆட்டம்" போட்டு பொழுதை போக்கி வருகின்றனர்.

அவர்களில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தான் செய்த சேட்டையை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

இர்பான் பதான் சேட்டை

இர்பான் பதான் சேட்டை

இர்பான் பதான் தன் வீட்டின் படிக்கட்டின் பக்கவாட்டில் ஒளிந்து கொண்டு, ஒரு கையில் கேமராவுடன் காத்திருக்கிறார். அப்போது ஒரு சிறுவன் மாடிப்படி ஏறி மேலே வருகிறான். அவனை கூச்சல் போட்டு பயமுறுத்துகிறார் பதான்.

இஸ்கூல் விளையாட்டு

"இதெல்லாம் நம்ம ஸ்கூல் படிக்கிற காலத்துல, மூணாப்பு, நாலாப்புல விளையாடுன ஆட்டமாச்சே. இதையா அவர் இப்ப ஆடுறாரு?" என நினைக்க தோன்றுகிறது. அந்த அளவுக்கு கொரோனா வீட்டுக்குள் நம்மை பொழுது போக்க முடியாமல் பூட்டி வைத்துள்ளது.

குரளி வித்தை காட்டினார்

குரளி வித்தை காட்டினார்

அதே போல, மற்ற கிரிக்கெட் வீரர்களும் தங்கள் வீட்டில் ஆட்டம் போட்டு வருகிறார்கள். ரோஹித் சர்மா தன் குட்டி மகளுக்கு கிரிக்கெட் கற்றுக் கொடுத்து வருகிறார். ஸ்ரேயாஸ் ஐயர் தன் நாய்க்கு "குரளி வித்தை" காட்டி வருகிறார்.

போர்வை மேஜிக்

போர்வை மேஜிக்

ஸ்ரேயாஸ் ஐயர் மேஜிக் செய்வாராம். அதை வீடியோ எடுத்து தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார் அவர். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் நாய்க்கு முன் போர்வையை காட்டி நின்று கொண்டு இருக்கிறார்.

பரிதாப நாய்

அவர் போர்வையை கீழே விடும் போது அங்கே அவர் இல்லை. அந்த நாய் பாவம்.. எங்கே நம்ம ஸ்ரேயாஸ் என பக்கத்து அறைக்குள் போய் தேடியது. இப்படி தான் நம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பொழுதை போக்கி வருகிறார்கள்.

Story first published: Wednesday, March 25, 2020, 14:41 [IST]
Other articles published on Mar 25, 2020
English summary
Irfan Pathan visits his childhood days during Quarantine. He shared a video in instagram.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X