Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் 13 போட்டி தான் இருக்கு.. பிசிசிஐக்கு எச்சரிக்கை விடுத்த இர்பான் பதான்

மும்பை: டி20 உலகக் கோப்பைக்கு தயாராக இந்தியாவுக்கு இன்னும் 13 போட்டிகள் மட்டும் தான் இருப்பதாக இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா தொடர் முடிந்த உடன் இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக 3 டி20 போட்டியில் மோதுகிறது.

அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகளும், மீண்டும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக செப்டம்பரில் 2 டி20 போட்டிகளும், ஆசிய கோப்பை போட்டியிலும் இந்தியா பங்கேற்கிறது.

பிளேயிங் லெவன் குழப்பம்

பிளேயிங் லெவன் குழப்பம்

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியை இன்னும் பிசிசிஐ தயார் செய்யவில்லை. அதாவது பிளேயிங் லெவனில் எந்த வீரரை தேர்வு செய்வது என்ற குழப்பம் இன்னும் நீடிக்கிறது. ரோகித் சர்மாவும், ராகுலும் தொடக்க வீரராக தேர்வாகி விடுவார்கள்.

நடுவரிசை போட்டி

நடுவரிசை போட்டி

மூன்றாவது வீரராக விராட் கோலி இருப்பார், 4வது வீரராக சூர்யகுமார் யாதவ், 5வது வீரராக ஹர்திக் பாண்டியா, 6வது வீரராக தினேஷ் கார்த்திக், 7வது வீரராக ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்கள் போட்டி போடுகின்றனர். ஆனால் அதே இடத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களும் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் போட்டி

பந்துவீச்சாளர்கள் போட்டி

இதே போன்று பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார்,பும்ரா, ஹர்சல் பட்டேல், ஆவேஷ் கான், உம்ரான் மாலிக், ஆர்ஷ்தீப் சிங் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களும், சாஹல் , அக்சர், ஜடேஜா, குல்தீப், ரவி பிஸ்னாய் போன்ற சுழற்பந்துவீச்சாளர்களும் போட்டியிடுகின்றனர். இதில் யார் சிறந்த 11 வீரர்கள் என்ற முடிவுக்கு பிசிசிஐ இன்னும் வரவில்லை.

இர்பான் பதான் கோரிக்கை

இர்பான் பதான் கோரிக்கை

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான். ஸ்ரேயாஸ் ஐயரை டி20 உலக கோப்பைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் எதிர்காலத்துக்கான வீரர் என்றும், அவர் தனது திறமையை வெஸ்ட் இண்டீஸ், இலங்கைக்கு எதிரான தொடரில் நிரூபித்துவிட்டதாக தெரிவித்தார். எனினும் ஸ்ரேயாஸ் ஐயர் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக ரன் அடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Story first published: Sunday, June 19, 2022, 18:28 [IST]
Other articles published on Jun 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+