For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தம்பி.. தெரியாம அதை கேட்டுட்டேன்.. அண்ணன் யூசுப்பை கதற வைத்த இர்பான் பதான்.. வைரல் வீடியோ!

டெல்லி : சமூக வலைதளங்களில் இர்பான் பதான் - யூசுப் பதான் டிக்டாக் வீடியோ ஒன்று வைரலாக வலம் வருகிறது.

யூசுப் பதான் ஒரு விஷயத்தை கேட்க, அதற்கு பதில் அளிக்கும் இர்பான் பதான் நீட்டி முழக்கிக் கொண்டே போகிறார். அதை கண்டு வெறியாகிறார் யூசுப்.

Recommended Video

தம்பி.. தெரியாம அதை கேட்டுட்டேன்.. அண்ணன் யூசுப்பை கதற வைத்த இர்பான் பதான்.. வைரல் வீடியோ!

இது பிரபல ஹிந்தி நகைச்சுவை திரைப்படமான "தமால்" திரைப்படத்தில் வரும் காட்சி. அதைத் தான் இந்த வயிறு குலுங்க வைக்கும் டிக்டாக் வீடியோவாக செய்துள்ளனர் பதான் பிரதர்ஸ்.

முடங்கிக் கிடக்கின்றனர்

முடங்கிக் கிடக்கின்றனர்

கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். முன்னதாக இர்பான் பதான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கிரிக்கெட் தொடர்பான விவாதங்களில் பங்கேற்று வந்தார். யூசுப் பதான் பயிற்சி, உள்ளூர் போட்டிகளில் ஈடுபட்டு வந்தார்.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

அவர்கள் இருவரும் தங்களால் இயன்ற சிறு சிறு உதவிகளை கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் லாக்டவுனால் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு செய்தனர். இதன் இடையே சமூக வலைதளங்களில் புகைப்படம், வீடியோக்கள் போட்டு பொழுதை போக்கி வருகின்றனர்.

வைஃபை கிடைக்கலையே!

வைஃபை கிடைக்கலையே!

முதலில் "ஐயர்" என்பார். யூசுப் பதான் அதை அடித்துப் பார்ப்பார். வைஃபை தொடர்பு கிடைக்காது. அப்போது இர்பான் பதான் "வேணுகோபால ஐயர்" என்பார். அப்போதும் வைஃபை கிடைக்காது. அடுத்து "முத்துஸ்வாமி வேணுகோபால ஐயர்" என்பார். அப்போதும் கிடைக்காது.

உனக்கு என்ன பைத்தியமா?

உனக்கு என்ன பைத்தியமா?

அடுத்து "சின்னஸ்வாமி முத்துஸ்வாமி வேணுகோபால ஐயர்"என்பார். அதோடு யூசுப் செம கடுப்பாகி, "உனக்கு என்ன பைத்தியமா? இவ்வளவு பெரிய பெயரா வைப்பது?" என அவர் மீது பாய்வார். இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

எந்த நகைச்சுவை காட்சி?

எந்த நகைச்சுவை காட்சி?

இந்த நகைச்சுவை காட்சி பிரபல ஹிந்தி நகைச்சுவை திரைப்படமான "தமால்"-இல் இடம் பெற்றுள்ளது. அந்த காட்சி இந்த டிக்டாக் வீடியோவை விட நீளமானது. அதாவது இன்னும் நீளமான பெயர். அந்த காட்சியில் இரண்டு பேர் காரில் கோவா செல்ல லிப்ட் கேட்பார்கள்.

பெயரை சொன்னால் கோவா வந்துடும்

பெயரை சொன்னால் கோவா வந்துடும்

வேட்டி சட்டை போட்டுக் கொண்டு காரில் வரும் ஒரு வயதானவர் அவர்களுக்கு லிப்ட் கொடுப்பார். அந்த இருவரும் கோவா செல்ல எத்தனை நேரம் ஆகும் என்பார்கள். நாம் பெயரை சொல்லி அறிமுகம் செய்வதற்குள் கோவா வந்து விடும் என்பார்.

கோபம் வரவழைக்கும் பெயர்

கோபம் வரவழைக்கும் பெயர்

அப்போது தான் இந்த "ஐயர், வேணுகோபால் ஐயர், முத்துஸ்வாமி வேணுகோபால் ஐயர்..." என நீளமான அந்த பெயரை சொல்ல ஆரம்பிப்பார். ஒரு கட்டத்தில் அவர்கள் கடுப்பாகி கோபத்தில் காரை விட்டே இறங்கிச் செல்வது தான் அந்த நகைச்சுவை காட்சி.

அந்த பெயர் இதுதான்!

அந்த பெயர் இதுதான்!

சரி, அவரின் முழு நீளப் பெயர் என்ன என்கிறீர்களா? மனதை திடப்படுத்திக் கொண்டு படிக்கவும். "ஸ்ரீபாலவர்தன அட்டப்பட்டு ஜெயசூர்யா லக்ஷ்மன் சிவராமகிருஷ்ண சிவவெங்கட ராஜசேகர ஸ்ரீநிவாசன திருச்சிப்பள்ளி ஏக்யப்பரம்பில் பரம்பத்தூர் சின்னஸ்வாமி முத்துஸ்வாமி வேணுகோபால ஐயர்".

Story first published: Saturday, April 25, 2020, 12:31 [IST]
Other articles published on Apr 25, 2020
English summary
Irfan Pathan - Yousuf Pathan TikTok video from Dhamaal comedy scene - Iyer, Venugopal Iyer. This TikTok video is going viral.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+