இர்பான் பதானா? – இர்பான் கானா?…. ஐய்யோ இப்படி கன்ப்யூஸ் ஆயிட்டாங்களே?
டெல்லி: ஹலோ சாரி ராங்க் நம்பர்’ – இதை போனில் சொல்லலாம், செல்போனில்கூட சொல்லலாம். ஆனால், டுவிட்டரில் இவ்வாறு ராங்க் கால் வந்தால் என்ன செய்வது. இர்பான் பதானுக்கு இதுபோன்ற ஒரு ராங்க் கால் வந்தது. அதற்கு அவர் அளித்த பதில்தான், டாக் ஆப் த டுவிட்டர்.
பிலிம்பேர் சினிமா விருதுகள் வழங்கப்பட்டன. இதில், சிறந்த நடிகருக்கான விருது ஹிந்தி மீடியம் படித்தில் நடத்த இர்பான் கானுக்கு வழங்கப்பட்டது. இதற்கு வாழ்த்து தெரிவித்து, பெமினா பத்திரிகை டுவிட்டரில் வாழ்த்து செய்தி அனுப்பியது.

ஆனால், அந்த செய்தியை, கிரிக்கெட் வீரர் இர்பான் பதானுக்கு அனுப்பப்பட்டு விட்டது.
ரொம்ப நன்றி. மன்னிக்கவும் என்னால் வந்து வாங்க முடியாது. எனக்கான விருதை என்னுடைய வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்' என்று இர்பான் கான், சாரி சாரி, இர்பான் பதான் பதில் அனுப்பினார்.
இதுதான் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.
Story first published: Monday, January 22, 2018, 21:01 [IST]
Other articles published on Jan 22, 2018


Click it and Unblock the Notifications