
கோலாலம்பூரில் அனுஷ்கா
அனுஷ்கா சர்மா, கோலாலம்பூரில் நடந்த இந்தியா சர்வதேச விருது விழாவுக்குப் போய் விட்டார். இதனால் கோஹ்லியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கை கூடவில்லை.

கொல்கத்தாவில் கோஹ்லி
அதேபோல கொல்கத்தாவில் நடந்த கிரிக்கெட் பயிற்சிக்கு கோஹ்லி போய் விட்டார். இதனால் அவரால் அனுஷ்காவை நேரில் சந்திக்க முடியவில்லை.

ஜஸ்ட் மிஸ் பாஸ்!
இந்த கேம்ப் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், அனுஷ்காவுடன் சேர்ந்து கோஹ்லியும் மலேசியாவுக்கு ஓடியிருப்பார். ஆனால் அது முடியாமல் போய் விட்டது.

கிடைக்குமா உற்சாகம்
இதனால் வங்கதேசம் சென்று கோஹ்லிக்கு உற்சாகமூட்டுவாரா அனுஷ்கா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கோஹ்லிக்கு இது முதல் கேப்டன் போட்டி என்பதால் நிச்சயம் அனுஷ்கா அங்கு செல்வார் என்று தெரிகிறது.

அனுஷ்காவும் விரும்புவார்
இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றால் அது ஒரு முழு நேர கேப்டனாக கோஹ்லிக்கும் கிடைக்கும் முதல் வெற்றியுமாகும். எனவே அந்த அருமையான தருணத்தில் கோஹ்லிக்கு அருகில் இருக்க அனுஷ்காவும் விரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"டெஸ்ட்"டுல ஜெயிச்சா சரிதான்!


Click it and Unblock the Notifications











