Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தேர்வுக்குழுவில் மீண்டும் சேத்தன் சர்மா??.. பிசிசிஐ எடுக்கும் நடவடிக்கை என்ன.. புதிய அப்டேட் இதோ!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் நடக்கும் பிரச்சினைகளை பொதுவெளியில் போட்டு உடைத்த தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா மீண்டும் தேர்வுக்கூட்டங்களில் கலந்துக்கொள்ள முடியுமா என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் உலகில் நேற்று முதல் சேத்தன் சர்மா என்ற பெயர் தான் சூறாவளியை கிளப்பிவிட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆப்ரேஷனில் பல திடுக்கிடும் தகவல்களை உளறியுள்ளார்.

விராட் கோலிக்கு எதிராக பல பிசிசிஐ அதிகாரிகள் செயல்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். இதனை விட ஒருபடி மேலே சென்று இந்திய வீரர்கள் ஊக்கமருந்தை பயன்படுத்தி வாய்ப்பு பெற்றுவதாக பரபரப்பு தகவலை கூறியிருந்தனர்.

சேத்தன் சர்மா பேச்சு

சேத்தன் சர்மா பேச்சு

சேத்தன் சர்மாவின் வீடியோவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள பிசிசிஐ வட்டாரம், அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்வுக்குழு அதிகாரிகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் பணியமர்த்தப்படுகிறார்கள். அவர்கள் பிசிசிஐ-ன் உள் விவகாரங்களை மீடியாக்களில் பேசுவதற்கு அனுமதி கிடையாது எனக்கூறப்படுகிறது. அந்தவகையில் சேத்தன் சர்மா விதிமுறைகளை மீறியுள்ளார்.

நடவடிக்கை என்ன?

நடவடிக்கை என்ன?

இந்நிலையில் இதுகுறித்த புது தகவல்கள் வெளியாகியுள்ளது. சேத்தன் சர்மா விவகாரத்திற்கு விசாரணை குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. அவர்களிடம் சேத்தன் சர்மா தனது பக்க நியாயத்தை கூற வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது. அவரின் விளக்கத்தை கேட்ட பிறகு என்ன நடவடிக்கை என்பதை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறவுள்ளார். எனினும் அவரை பணிநீக்கம் செய்ய தான் அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி

ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இன்னும் ஒரு வாரத்திற்குள் அதனை அறிவித்தாக வேண்டும். எனவே இந்த ஒருமுறை மட்டும் தேர்வுக்குழுவின் ஆலோசனையின் போது சேத்தன் சர்மா பங்கேற்பார் எனத்தெரிகிறது. அதன்பின்னர் விசாரணைகள் தொடங்கும்.

பிசிசிஐ அதிகாரி தகவல்

பிசிசிஐ அதிகாரி தகவல்

இது ஒருபுறம் இருக்க, சேத்தன் சர்மாவின் பேச்சை பெரிதுபடுத்த வேண்டாம் என்பது போல பிசிசிஐ அதிகாரி பேசியுள்ளார். அதில்,சேத்தன் சர்மா கொஞ்சம் ஓவராகவே பேசிவிட்டார். இந்திய அணியில் உள்ள டாப் வீரர்கள் யாருமே அவரிடம் பேசிக்கொண்டதில்லை. ரோகித், விராட் கோலி, ராகுல் டிராவிட் போன்றவர்களிடம் சேத்தன் பேசியதை எங்கேயாவது பார்த்தது உண்டா?, பயிற்சி நேரங்களில் கூட பார்த்திருக்க முடியாது. அவர் ஒரு ஓரமாக நின்று தான் போட்டிகளை பார்ப்பார். யாரும் அவரிடம் பேச வேண்டும் என நினைத்தது இல்லை எனக்கூறியுள்ளார்.

Story first published: Thursday, February 16, 2023, 11:41 [IST]
Other articles published on Feb 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+