Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் மண்ணின் மைந்தர்கள் ஆதிக்கம்!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி அடைந்த படுதோல்வியால், சுமார் ஐந்தாண்டு காலத்துக்கு பிறகு இந்திய அணிக்கு உள்நாட்டு பயிற்சியாளர்கள் கிடைத்துள்ளனர்.

2009ம் ஆண்டுவரை இந்திய பயிற்சியாளர்கள் கோலோச்சி வந்த கிரிக்கெட் அணியில், பிற்காலத்தில் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் ஆதிக்கம் பெருகிறது.

கிரிஸ்டன் காரணம்

கிரிஸ்டன் காரணம்

ஜான் ரைட், கேரி கிரிஸ்டன் போன்ற பயிற்சியாளர்களின் ஆலோசனையில் இந்தியா சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்ததால் அன்னிய பயிற்சியாளர்கள் மீது பிசிசிஐக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது.

தோல்வியை பரிசளித்த பிளட்சர்

தோல்வியை பரிசளித்த பிளட்சர்

இந்நிலையில்தான் மற்றொரு அன்னியரான, டன்கன் பிளட்சர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு இந்திய அணி தோல்விகளை சந்திக்க தொடங்கியது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை இழந்தபோதே இவரை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ரு மாஜி வீரர்கள் கலக குரல் எழுப்பினர்.

இங்கிலாந்தில் படுதோல்வி

இங்கிலாந்தில் படுதோல்வி

ஆனால் பிளட்சரை பயிற்சியாளராக தொடர்ந்தது பிசிசிஐ. இதற்கான பலனை நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா பெற்றது. இதன்பிறகு மீண்டும் கலக குரல்கள் ஒலித்தன.

புதிய நிர்வாகிகள்

புதிய நிர்வாகிகள்

இதன்விளைவாக சஞ்சய் பங்கர், பாரதி அருண் ஆகிய இந்தியர்கள் உதவி பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக இயக்குநர் என்ற பதவியை உருவாக்கி அதற்கு இந்திய முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியர்கள் ஆதிக்கம்

இந்தியர்கள் ஆதிக்கம்

ரவிசாஸ்திரியிடம் அனுமதி பெற்ற பிறகுதான் எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும் என்று பிளட்சருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே பிளட்சர், டம்மி ஆக்கப்பட்டுள்ளார். பயிற்சியாளர் பெயர் மட்டுமே வேறு, மற்றபடி இந்திய வீரர்கள்தான் பயிற்சியை முழுமையாக பார்த்துக்கொள்கிறார்கள்.

எனவே 2009ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியின் மீண்டும் மண்ணின் மைந்தர்கள் ஆதிக்கம் ஆரம்பித்துள்ளது.

Story first published: Friday, August 22, 2014, 12:06 [IST]
Other articles published on Aug 22, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+