Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரிடம் நியாயம் கிடைக்கும்னு பார்த்தேன்.. ஆனா இப்படி பண்ணிட்டாரே!! மனம் வெதும்பிய மிதாலி ராஜ்

Recommended Video

மிதாலி ராஜ் அணியில் இடம் பெறாதது ஏன்?.. வெளிவந்த உண்மை- வீடியோ

மும்பை : இந்திய மகளிர் அணியில் மிதாலி ராஜ் விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது.

மிதாலி ராஜ் தனக்கு நேர்ந்த அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வுகளை பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி மற்றும் மேலாளர் சபா கரீம் ஆகியோருக்கு கடிதமாக எழுதியுள்ளார்.

அதில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாக கமிட்டி உறுப்பினரான டயானா எடுல்ஜி எவ்வாறு முன்னுக்கு பின்னாக நடந்து கொண்டார் என கூறியுள்ளார்.

நிர்வாக கமிட்டியிடம் விளக்கம்

நிர்வாக கமிட்டியிடம் விளக்கம்

மகளிர் உலக டி20 தொடரில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் மிதாலி ராஜ் விளையாடவில்லை. இது பலரால் விமர்சிக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தை நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானாவிடம் எடுத்துக் கூறியதாக மிதாலி ராஜ் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விளக்கம் அளித்தார்

விளக்கம் அளித்தார்

பயிற்சியாளர் ரமேஷ் பவார் எப்படி தன்னை அவமானப்படுத்தினார், எப்படி திட்டமிட்டு தன்னை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான குரூப் சுற்று போட்டி மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் ஆட விடாமல் செய்தார் என்பதை பற்றி எல்லாம் தெளிவாக கூறியுள்ளார் மிதாலி.

மாற்றி பேசினாரா?

மாற்றி பேசினாரா?

மிதாலியிடம் நடந்தவற்றை கேட்டுக் கொண்ட டயானா, செய்தியாளர்களிடம் அணித் தேர்வு விஷயங்களில் நாங்கள் தலையிட மாட்டோம். ஆஸ்திரேலியா போட்டியில் வெற்றி பெற்ற அணியை அரையிறுதியில் ஆட வைத்தால் வெற்றி பெறும் என நினைத்துள்ளார்கள். அந்த திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. இந்திய அணிக்கு அன்று ஒரு மோசமான நாள். இந்த விஷயத்தில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என கூறினார் டயானா.

மன அழுத்தத்தில் உள்ளேன்

மன அழுத்தத்தில் உள்ளேன்

தனக்கு ஆதரவாக இருப்பது போல பேசிய டயானா வெளியே வேறு விதமாக கூறியதை அறிந்து அதிர்ந்த மிதாலி ராஜ் தன் கடிதத்தில் டயானாவை பற்றி தான் முதலில் குறிப்பிட்டுள்ளார். "எனது 20 ஆண்டு கிரிக்கெட் வாழ்வில் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். ஆனால், அதிகாரத்தில் இருக்கும் சிலர் என்னை அழிக்கவும், எனது மன உறுதியை குலைக்கவும் செய்கிறார்கள்" என டயானா பற்றி கூறியுள்ளார் மிதாலி.

பிசிசிஐ கருத்து கூறவில்லை

பிசிசிஐ கருத்து கூறவில்லை

பயிற்சியாளர் ரமேஷ் பவார் திட்டமிட்டு தன்னை அரையிறுதி போட்டியில் ஆட விடாமல் செய்தார் என மிதாலி கூறியுள்ளார். அந்த அரையிறுதியில் இந்தியா தோல்வி அடைந்ததால் மட்டுமே இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது. ஒரு வேளை இந்தியா வெற்றி பெற்று இருந்தால் இது பெரியளவில் பேசப்பட்டு இருக்காது. இந்த விவகாரத்தில் பிசிசிஐ, நிர்வாக கமிட்டி உட்பட யாரும் இன்னும் கருத்து கூறவில்லை.

Story first published: Wednesday, November 28, 2018, 15:29 [IST]
Other articles published on Nov 28, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+