Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி ஓய்வு பெறுகிறாரா...? ரசிகர்களிடையே திடீர் பரபரப்பு!

Recommended Video

தோனி ஓய்வு பெற போவதாக ரசிகர்களிடம் புதிய குழப்பம்- வீடியோ

டெல்லி: கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுகிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமும் உள்ளது.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்கிறது. 3 டி-20 போட்டித் தொடரை 2-1 என இந்தியா வென்றது. அடுத்து நடந்த ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என இங்கிலாந்து வென்றது.

லீட்ஸில் நேற்று நடந்த மூன்றாவது ஒருதினப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இந்த நிலையில், மைதானத்தில் இருந்து வெளியேறும்போது, அம்பயரிடம் இருந்து பந்தை கேட்டு வாங்கிக் கொண்டார் தோனி.

இதுதான் ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக தொடர் வெற்றி அல்லது சிறந்த பவுலிங் செய்தவர்கள், ஒரு நினைவுக்காக ஸ்டம்ப் அல்லது பந்தை எடுத்துச் செல்வார்கள்.

பந்தை வாங்கியது ஏன்

ஆனால், தொடரை இழந்த நிலையில், போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில், பந்தை தோனி வாங்கிச் சென்றது ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்டில் விளையாட மாட்டார்

ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால், அடுத்து நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோனி விளையாட மாட்டார்.

ரசிகர்களுக்கு அதிர்ச்சி

அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்க உள்ள உலகக் கோப்பையில் தோனி விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு உள்ளது. இந்த நிலையில், நேற்று நடந்த போட்டியோடு நாடு திரும்ப உள்ள நிலையில், தோனி பந்தை வாங்கி வந்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தோனி சாதனை

இதுவரை 321 ஒருதினப் போட்டிகளில், 10,046 ரன்கள் எடுத்துள்ளார் தோனி. 10 ஆயிரம் ரன்களை கடந்த நான்காவது இந்தியர் என்ற சாதனையைப் புரிந்துள்ளார். இதைத் தவிர 93 டி-20 போட்டிகளில் 1,487 ரன்கள் எடுத்துள்ளார். கீப்பிங்கிலும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் தோனி. தோனி தொடர்ந்து விளையாடுவாரா என்பதே ரசிகர்களின் தற்போதைய கேள்வியாக உள்ளது.

Story first published: Wednesday, July 18, 2018, 12:59 [IST]
Other articles published on Jul 18, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+