Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அன்றே கணித்த தோனி” முதல் ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் விலகிய பின்னணி.. பிசிசிஐ போட்ட திட்டம்!

மும்பை: தோனி என்றோ கூறிய அட்வைஸை, இன்று வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் பிசிசிஐ செயல்படுத்தி பார்க்கவுள்ளது.

Recommended Video

Auction Tableல் Dhoni! IPL 2022ல் CSKவுக்காக பல Decisions | OneIndia Tamil

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் பிப்ரவரி 6ம் தேதி தொடங்கவுள்ளது.

தென்னாப்பிரிக்காவுடன் மோசமான தோல்வியை தழுவிய இந்திய அணி, இதில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கே.எல்.ராகுல் ஏன் விலகல்

கே.எல்.ராகுல் ஏன் விலகல்

கடந்த முறை கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக விலகியிருந்த சூழலில் இந்த முறை துணைக்கேப்டன் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் பங்குபெற மாட்டார் என்றும் 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டியில் அணிக்கு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே கே.எல்.ராகுலுக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பண்ட் துணைக்கேப்டனாக செயல்படவுள்ளார்.

 தோனியின் அட்வைஸ்

தோனியின் அட்வைஸ்

பண்ட்-ஐ துணைக்கேப்டனாக அறிவித்ததில் இருந்து 2017ம் ஆண்டு தோனி கூறிய அட்வைஸ் தான் வேகமாக பரவி வருகிறது. கேப்டன்சியில் இருந்து தோனி விலகியபோது, செய்தியாளர்களை சந்தித்தார். அதில் எப்போதுமே விக்கெட் கீப்பர் தான் அணியின் துணைக்கேப்டனாக இருக்க முடியும். அதனை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி.

காரணம் என்ன

காரணம் என்ன

போட்டியின் போது ஃபீல்ட் செட்டிங் குறித்த ஆலோசனைகளை விக்கெட் கீப்பரால் மட்டும் தான் கேப்டனுக்கு சரியாக கூற முடியும். மேலும் இக்கட்டான சூழல்களில் விக்கெட் கீப்பர் தான் சில ஃபீல்டிங் மாற்றங்களை கொண்டு வருவார். எனவே விக்கெட் கீப்பர் தான் துணைக்கேப்டனாக இருக்க முடியும் எனத் தெரிவித்தார்.

பிசிசிஐ போட்ட திட்டம்

பிசிசிஐ போட்ட திட்டம்

இதனை தான் பிசிசிஐ தற்போது முயற்சித்து பார்க்கிறது. இந்திய அணியில் தற்போது கேப்டன்சி சர்ச்சை நிலவி வருகிறது. ரோகித் சர்மாவுக்கு பிறகு கே.எல்.ராகுலை கேப்டனாக நியமிக்கும் எண்ணத்தில் அவரை துணைக்கேப்டனாக நியமித்தனர். ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர் கேப்டன்சி செய்த 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. எனவே தோனியின் அறிவுரைப்படி ரிஷப் பண்ட்-ஐயும் அவ்வப்போது கேப்டன்சிக்கு பயன்படுத்திப் பார்க்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. மேலும் இதனை வைத்து டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் ரிஷப் பண்ட் பதவி பெற வாய்ப்புள்ளது.

Story first published: Tuesday, February 1, 2022, 17:05 [IST]
Other articles published on Feb 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+