Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஈகோ மோதல்! "முடியாது" என்று விடாப்பிடியாக மறுக்கும் கோலி - கடைசி நாளில் காத்திருக்கும் "சிக்கல்"

லண்டன்: இந்திய அணியில் அஷ்வினை சேர்க்காமல் தவிர்த்தது, போட்டியே முடியும் தருவாயில் பெரும் சிக்கலாக உருவெடுக்கும் நிலையில் உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தியா நிர்ணயித்த 368 ரன்கள் இலக்கில், இங்கிலாந்துக்கு தேவையான ரன்கள் 291 மட்டுமே.

கைவசம் 10 விக்கெட்டுகள் மீதமுள்ளன. நேற்று நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது.

 அது மட்டும் போதுமா?

அது மட்டும் போதுமா?

இந்த நிலையில் தான், இன்று கடைசி நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. இங்கிலாந்து ஓப்பனர்களை பிரிக்க இந்திய பவுலர்கள் தடுமாறி வரும் நிலையில், அஷ்வின் சேர்க்கப்படாதது குறித்த சலசலப்பு விவாதமாக உருவெடுத்துள்ளது. நேற்று இந்திய அணிக்கு முழுதாக 32 ரன்கள் கையில் இருந்தது. ஆனால், ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. இத்தனைக்கும் ஜடேஜா 13 ஓவர்கள் வீசி இருந்தார். அவரால் நெருக்கடி கொடுக்க முடிந்ததே தவிர, விக்கெட் எடுக்க முடியவில்லை. துல்லியமான லைன் அண்ட் லெந்த்தில் பந்து வீசினார்.. ஆனால், விக்கெட் எடுக்க அது மட்டும் போதுமா?

 இந்திய பவுலர்களுக்கு டிமிக்கி

இந்திய பவுலர்களுக்கு டிமிக்கி

இந்நிலையில், இன்று கடைசி நாளில் வெற்றிப் பெறப் போவது யார் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. ஒருபக்கம் ஊடகங்கள் ஏன் அஷ்வின் அணியின் சேர்க்கப்படவில்லை என்று விவாதித்துக் கொண்டிருக்க, கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்க, மறுபக்கம் மூத்த வீரர்கள் நேரடியாகவே கேப்டன் கோலியை குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், நான்காவது டெஸ்ட்டில் அஷ்வின் சேர்க்கப்படவில்லை என்று கேப்டன் கோலி தெரிவித்த போது, "அஷ்வினை இந்த போட்டியில் ஏன் சேர்க்காமல் விட்டோம்? என்பதை நினைத்து இந்தியா வருத்தப்படும்" என்றும், "இந்தியா நிச்சயம் ஏமாறும்" என்றும் கூறியிருந்தார். அவர் கூறியதன் சாம்பிள் தான், நேற்று 32 ஓவர்களை சந்தித்தும், இங்கிலாந்து ஓப்பனர்கள் தங்கள் விக்கெட்டை பறிகொடுக்காமல், இந்திய பவுலர்களுக்கு டிமிக்கி கொடுத்தார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

 ஏன் அஷ்வினை மிஸ் செய்கிறோம்?

ஏன் அஷ்வினை மிஸ் செய்கிறோம்?

பொதுவாக தோனியிடம் ஒரு ஸ்டிராடஜி இருக்கும். முக்கியமான நேரத்தில் விக்கெட் எடுக்க முடியவில்லை என்றால், இப்படித்தான் பந்து வீச வேண்டும் என்ற ஃபார்மட்டில் இருந்து விலகி, பவுலர்களை கமர்ஷியலாக வீச வைப்பார். பந்தை ஏழாவது ஸ்டெம்புக்கு வீசுவது, ஆஃப் ஸ்டெம்புக்கு அருகே ஸ்லிப்பில் ஃபீல்டரை நிறுத்திவிட்டு, லெக் ஸ்டெம்பில் போடச் சொல்வது என்று ஏதாவது ஒரு கோக்குமாக்கு வேலை செய்து கொண்டிருப்பார். நேற்று ஜடேஜா லைன் அண்ட் லெந்த்தில் பந்து வீசினாரே தவிர, வேறு வித்தியாசமாக எதையும் அவர் முயற்சித்து பார்க்கவில்லை. சில்லியில் இரண்டு ஃபீல்டர்களை நிறுத்தி ஏதாவது முயற்சித்திருக்கலாம். சில்லி பாயிண்ட்டில் ஃபீல்டர்கள் இருந்தார்கள். ஆனால், சில்லியில் நிறுத்தி இருக்கலாம். மிட் ஆஃப், மிட் ஆஃன் என இறுதி சில்லி பகுதியிலும் ஃபீல்டர்களை நிறுத்தியிருக்கலாம். இப்படி ஏதாவது முயற்சித்து பார்த்திருக்கலாம். இந்த இடத்தில் தான் இந்திய அணி அஷ்வினை மிஸ் செய்கிறது.

 வாய்ப்பை மறுத்த கோலி

வாய்ப்பை மறுத்த கோலி

கடைசி இரு நாட்களுக்கும் ஸ்பின் கைக்கொடுக்கும் என்று பிட்ச் ரிப்போர்ட் முன்பே கொடுக்கப்பட்ட போதும் ஏன் அஷ்வினை சேர்க்கவில்லை என்பதே கேள்வியாக உள்ளது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பே நடந்த டீம் மீட்டிங்கில் அஷ்வினை சேர்ப்பது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அப்படி அஷ்வினை சேர்த்தால், ஊடகங்களுக்கோ அல்லது விமர்சங்களுக்கோ பயந்து அவரை சேர்த்ததாகிவிடும். அது இந்திய அணிக்கு நல்லதல்ல. சரியோ, தவறோ நாம் எடுப்பது தான் இறுதி முடிவாக இருக்க வேண்டும் என்பதில் கோலி மிகத் தீவிரமாக இருந்துள்ளாராம். அதனால் தான் நான்காவது போட்டியில் அஷ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 கோலி மறுக்க முடியாது

கோலி மறுக்க முடியாது

வீரர்களுக்கு இடையே நிலவும் இந்த ஈகோ மோதல், நிச்சயம் அணிக்கு ஒருவகையிலும் பயன்படாது. இதை கோலி உட்பட அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும், ஆனால், ஒரு விஷயம் மட்டும் உறுதி.. அஷ்வின் போன்ற உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்நரை தொடர்ந்து நான்கு டெஸ்ட் போட்டிகளில் பெஞ்சில் உட்கார வைப்பது என்று ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று. இதை கோலி மறுக்கவே முடியாது!. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தின் முடிவு, இந்த ஈகோ விவாகரத்துக்கும் ஒரு முடிவு கட்டும் என நம்புவோம்!

Story first published: Monday, September 6, 2021, 14:58 [IST]
Other articles published on Sep 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+