Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டாரா இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்? இன்ஹேலரை பயன்படுத்தியது ஏன்?

பெங்களூரு: பெங்களூரு மைதானத்தில் நடைபெற்ற பயிற்சியின் போது இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆஸ்துமா பாதிப்புள்ளவர்கள் பயன்படுத்தும் இன்ஹேலரை பயன்படுத்தியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக இங்கிலாந்து அணியை டிஃபெண்டிங் சாம்பியன் என்று பத்திரிக்கையாளர்கள் குறிப்பிட்ட போது, திடீரென இடைமறித்த இங்கிலாந்து கேப்டன் பட்லர், எங்களை டிஃபெண்டிங் சாம்பியன்ஸ் என்று அழைக்காதீர்கள். பெயரளவில் கூட எங்களுக்கு டிஃபென்ஸ் தேவையில்லை. அட்டாக்கிங் சாம்பியன்ஸ் என்று கூறலாம் என்று கூறி ஆச்சரியம் அளித்தார்.

Is England Player Ben Stokes suffering from Asthma? and why he used inhaler during the practice

ஆனால் பட்லர் எந்த நேரத்தில் அட்டாக்கிங் சாம்பியன்ஸ் என்று கூறினாரோ, அப்போது முதல் இங்கிலாந்து அணியை தான் அத்தனை அணிகளும் அட்டாக் செய்து வருகின்றனர். 4 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிகளிடம் தோல்வியடைந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதிலும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் கம்பேக் கொடுத்தும் அந்த அணியை காப்பாற்ற முடியவில்லை. இந்த நிலையில் இன்று நடக்கவுள்ள போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி களமிறங்கவுள்ளது. இதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தனர். அதேபோல் பென் ஸ்டோக்ஸும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் பயிற்சியின் போது நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ், ஆஸ்துமா பாதிப்புள்ளவர்கள் பயன்படுத்தும் இன்ஹேலரை பயன்படுத்தியுள்ளார். இந்த புகைப்படம் வெளியாகிய நிலையில், பென் ஸ்டோக்ஸ்-க்கு ஆஸ்துமா பாதிப்பு இருக்கிறதா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இதுகுறித்து விசாரிக்கையில், விளையாட்டு வீரர்கள் பலருக்கும் பயிற்சிக்கு முன் மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்படும். அதனை கட்டுப்படுத்த மருத்துவர்கள் இன்ஹேலரை பயன்படுத்துவார்கள். அதேபோல் பென் ஸ்டோக்ஸ் கால் மற்றும் இடுப்பில் காயமடைந்து அவதிபட்டு வருகிறார். இதனால் செயல்திறனை மேம்படுத்துவதற்கான ஸ்டெராய்டுகளை உடலில் செலுத்தும் கருவியாகவும் இன்ஹேலர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் பெங்களூரு மைதானத்தில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் மருத்துவர்களின் ஆலோசனையின்படியே பென் ஸ்டோக்ஸ் இன்ஹேலர் பயன்படுத்தியிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தகவல்படி, எந்த வீரருக்கும் ஆஸ்துமா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.

Story first published: Thursday, October 26, 2023, 11:59 [IST]
Other articles published on Oct 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+