Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"பேபி ஒரு வேலை இருந்தது".. கம்பீரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சை பதிவுகள்.. ஹேக் செய்யப்பட்டதா?

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விசித்திரமான மீம்கள் மற்றும் நகைச்சுவைப் புகைப்படங்கள் பகிரப்பட்டன. இதனால் அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என ரசிகர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

எப்போதும் தீவிரமான முகத்துடனும், சிரிப்பதே அரிதான ஒரு நபராகவும் அறியப்படும் கவுதம் கம்பீரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஜூலை 27 அன்று மாலை 4:00 மணியளவில் சில விசித்திரமான மீம்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்பட்டன. அதில் ஒன்றில், அவர் சிரிப்பது எவ்வளவு அரிதான விஷயம் என்பதைக் காட்டும் மீம்கள் இருந்தன.

Is Gautam Gambhir s Instagram account hacked Strange memes spark major concern among cricket fans

மற்றொரு மீமில், மக்கள் உதவி கேட்கும் போது கம்பீர் கண்டுகொள்ளாதது போலவும், ஆனால் "பேபி ஒரு வேலை இருந்தது" என்று மெசேஜ் வந்தவுடன், "ஆணையிடுங்கள் மேடம்" என்று அவர் பதிலளிப்பது போலவும் நகைச்சுவையாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

சுமார் 1.25 கோடி ஃபாலோயர்களைக் கொண்டுள்ள கம்பீரின் பக்கத்தில் இந்த பதிவுகள் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கேள்விகளை எழுப்பத் தொடங்கினர். "கம்பீர் சார் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது", "அவரே தன்னைத் தானே இப்படி ட்ரோல் செய்து கொள்ள மாட்டார்" எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அதே வேளையில், இது ஏதேனும் நிறுவனத்தின் விளம்பரமாக இருக்கலாம் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றதில் இருந்தே கம்பீருக்கு பெரும் அழுத்தம் நிலவி வருகிறது. சமீபத்தில் அவரது பயிற்சியின் கீழ் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 6 டி20 மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வென்றது.

அபிஷேக் சர்மாவை கழட்டி விட்டு அவருக்கு பதிலா 31 வயது வீரரை அணியில் எடுங்க.. ஸ்ரீகாந்த் யோசனை

அபிஷேக் சர்மாவை கழட்டி விட்டு அவருக்கு பதிலா 31 வயது வீரரை அணியில் எடுங்க.. ஸ்ரீகாந்த் யோசனை

இதற்கு முன் இந்திய மண்ணில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்களை இழந்த நிலையில், இது கம்பீரை மேலும் அழுத்தத்துக்கு ஆளாக்கி உள்ளது. இந்த தோல்விகளால் கம்பீரின் பயிற்சி முறைகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த இன்ஸ்டாகிராம் சர்ச்சை மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

சாம்சன் கெத்து பேட்டி

சாம்சன் கெத்து பேட்டி
Story first published: Tuesday, July 28, 2026, 7:10 [IST]
Other articles published on Jul 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+